நீர்த்தே
வதையே எதற்கோ பெருமழை
பம்பையின்
ஓரம் கொடுத்தாய்,
ஆர்த்தே
எழுதரும் பற்றர் குழாம்கா
லடிவைப்
பதனைத் தடுத்தாய்;
மூர்த்தியாம்
மூலவர் ஐயப்ப சாமிகள்
முன்னுனை
விட்டார் கெடுத்தாய்!
மாத்திரம்
வெப்பமண் தந்திறுக் கம்பட
மாற்றிட்
டிலைநெஞ் சிடித்தாய்.
சபரிமலைப் பக்கம் பற்றர்கள் நடந்து மேலேறும்
பாதைகளெல்லாம் சேறாகக் கிடக்கின்றன என்றும்
பற்றர்கள் காலடி வைக்கக் கூட முடியவில்லை - காலை
உள்ளுக்கு இழுக்கிறது என்றும் பாம்பு உட்பட பல நச்சு
உயிரிகள் அலைகின்றன என்றும் குருசாமிகள்
உரையாடலில் பேசிக்கொள்கின்றனர். எப்படி மலை
யேறுவது என்று கவலைப்படுகிறார்கள். அங்கு
செல்லமுடியாத இடர்நிலையை இப்பாடல் காட்டுகின்றது,
இது எழுசீர் ஆசிரிய விருத்தம். வெண்டளையில்
பாடப்பெற்றுள்ளது. எல்லாம் வெண்பா அடிகளாய்த்
தொடுக்கப்படுகிறது இது. சொல்லழகு வரும்படியாக
கொடுத்தாய் -தடுத்தாய் - கெடுத்தாய் - இடித்தாய் என்று
ஒவ்வோர் அடியும் இயைந்து முடிகின்றது.
பொருளுரை:
நீரின் தேவதையே! நீ ஏன் பம்பை நதியின் ஓரமுள்ள
பகுதிகளில் பெரிய மழையை ஏற்படுத்தினாய்?
எப்போதும் ஓலிசெய்துகொண்டு எழுகின்ற பக்தர்
கூட்டங்கள் மலையில் காலடி வைப்பதனை
நிறுத்திவைத்தாயே! ஆங்கு எழுந்தருளியிருக்கும்
மூலவரான ஐயப்பசாமிகள் உன்னை ு முன்னே
விட்டதனால் நீ நிலைமையைக் கெடுத்துவிட்டாய்.
நீ மாத்திரம் மண்ணுக்கு வெப்பத்தைத் தந்து அது
இறுக்கம்பெறச் செய்து மாற்றித் தரவில்லை என்றால்
எங்கள் நெஞ்சினை இடித்துப்போட்டுவிட்டாய்.
இது அந்த நீர்த்தேவதையிடம் செய்யப்படும் முறையீடு.
நீர்த்தேவதை : உருவக அணி.
மகிழ்வீராக.
குறிப்பு:
{ மூலத்தில் இல்லாத பல மாற்றங்கள் இங்கு சரிசெய்யப்பட்டன:
9.12.2019)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக