இப்போது
பணபரம் என்ற சொல்லைப் பார்ப்போம்.
இதை வேறு சிலர் பண
பரம் என்று இருசொற்களின்
புனைவாகக் கொண்டுள்ளனர்.
பணம் என்பது பண்ட
மாற்றுக்கு இடைநிகராக நிற்கும்
செலாவணியாகும். பண்டம்
என்ற சொல்லும் பணம் என்ற
சொல்லும் பண் என்ற தமிழ்ச்சொல்லினடிப்
பிறந்த சொற்களே. பண்டம்
என்பது செய்பொருள் அல்லது
பண்ணப்பட்ட பொருள்.
பண்+து+அம்.
= பண்டம் ஆகும்.
ண் + து என்பது
புணர்ச்சியில் டு ஆகும் என்பது
புணரியல் சொல்லும் இலக்கணம்.
பண் து > பண்ணியது.
பண் என்பதனுடன் அம்
விகுதி புணர்க்க, பணம்
ஆகிறது. இதில் து
என்ற இடைநிலை விடப்பட்டுள்ளது
காணலாம். பண் து
அம் : பண்டம்;
பண் அம் : பணம்.
து என்பது இல்லை.
பரம் என்பது பர அம்
என்ற பகுதி விகுதி இணைப்பு.
பர என்பது பரவு என்பதன்
அடிச்சொல்லாகும். பணம்
பரவிய நிலையே பரம் எனப்படுகிறது.
இது பரம்பொருள் என்ற
தமிழ்ச்சொல்லில் வரும் பரம்
என்ற சொல்லின் கருத்தே ஆகும்.
பரவியது எனவே பணபரம்
என்பது பணம்பரவிய கால நிலையைச்
சோதிடத்தில் குறிக்கிறது.
பேராசிரியர் வையாபுரிப்
பிள்ளை ( சென்னைப்
பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்
தலைவரும் முனைவர் மு வரதராசனார்
முனைவர் ராசமாணிக்கனார்
ஆகியோரின் மேலதிகாரப் பணியாளரும்
ஆகியவர் )
இவற்றை
எல்லாம் கவனிக்காமல் கிரேக்க
மொழி அகராதியில் இச்சொல்
இருப்பதைக் கொண்டே அது
கிரேக்கத்திலிருந்து
இந்தியாவிற்கு வந்தது என்று
முடிவுகட்டிவிட்டார்.
இந்தியா அல்லது
குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்து
கிரேக்கத்துக்குச் சென்றிருக்கலாம்
என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை
என்பதனை நாம் இதன் மூலம் நன்`
கறிந்து கொள்ளலாம்.
செலா வணி
என்பது : செல்லும்
அணி வகை என்பதாம். செல்:
செலா; நில்
- நிலா. வில்
- விலா; என்பவை
போல தொழிற்பெயர். செல்லுவது
அல்லது ஏற்கப்படும் மதிப்புடையது
என்பது பொருள், அணி
என்பது வகை எனல் ஆகும்.
பணபர
இராசிகள் எனில் பணவரவு செலவு
குறிக்கும் இராசிகள் அல்லது
இராசியிடங்கள் என்பதாம்.
இவை: 2-5-8-11 ஆம் வீடுகள். பிறப்பு அல்லது சென்ம இராசிகளிலிருந்து எண்ணவேண்டும்
கிரேக்க மொழியில் இது பணஃபர என்று திரித்து ஒலிக்கப்பெறுவதால் பேராசிரியர் தடுமாற்றம் அடைந்தார் என்பது தெளிவு ஆகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக