வெள்ளி, 14 செப்டம்பர், 2018

நரகா சூரன் ( நரகாசுரன், நரக அசுரன் )

நரகாசூரன் பற்றிய கதைகள் அல்லது தொன்மப் பதிவுகள் தீபாவளிப் பண்டிகையின் போதுதான் வெளிவந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும்.

நரகா சூரன் என்பவன் கிருஷ்ண பரமாத்மாவினுடைய மகன் என்றும் பரமாத்மாவே  அவனைக் கொன்றுவிட்டார் என்றும் கூறுவதுண்டு. வேறு வகையில் சொல்லப்பட்ட கதைகளும் பல.

விட்ணு அல்லது விஷ்ணு நீரின் அமைப்பினர் (  அம்சம் _).  இதற்குக் காரணம் கடலும் விண்ணும் நீல நிறம்.  இரண்டுமே மழை தருவன..  கடலின் நீரிலிருந்து எழுந்தது என்ற கருத்தை " நீரகம்"  எனற சொல் குறிக்கிறது.  இதுபின் நரக என்று மாறிற்று.  சூறாவளி என்ற சொல்லில் உள்ள சூர் என்பது
சூரன் ஆயிற்று.  நீரக சூர என்பதே பெயர்.  இதுபின் நரகாசூரன் என்று மாறியமைந்தது.

இன்றும் மொழியில் பல சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி வழங்குகின்றன.
றகரம் என்பது இரு ரகரங்களை இணைத்த எழுத்து.  இதை( றகரத்தை) உற்று ஆய்ந்து உணரலாம்.  றகரம் ஏற்பட்ட பின்  புதிய விதிகள் தோன்றிப் பின்னர் மரபுகளாயின.. வேறுபாடின்றி வழங்கும் சொற்களை இலக்கண நூல்களில் காணலாம்.

சூறாவளி, சூராவளி,  சூர,   அசுர என்பவற்றில் வரும் ரகரங்களை வைத்து வாதிடலாகாது.

சூர் சூரை சூறை என்பன ஒலிக்குறிப்பு அடிப்படையில் எழுந்த சொற்களாகலாம்.

நாராயணன் என்ற பெயருக்கு  நீராயினன் என்பதே மூலச்சொல்.  இது விண், கடல் மேகம் எல்லாவற்றையும் உட்படுத்தும்.

இச் "சமய"க் கருத்துகள் இயற்கை வணக்கத்திலிருந்து எழுந்தவை.  மாரி என்ற அம்மன் பெயரும் இன்றும் மழையைக் குறிக்கிறது.  மேகங்கள் கறுத்து மழை பொழிகிறது.  காளி என்பது இக்கருத்தை வலியுறுத்துவதே. இயற்கை அழகைப் பராவியதே முருகவணக்கம்.  நாற் கணங்களின் ஆட்சியனே கணபதி.செம்மை ஒளியே சிவமாகும். சூரிய சந்திரர் தேவர்கள் என்பர்.  கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார் என்பதே இந்துக் கொள்கை ஆகும்.

எல்லாம் இயக்கமுடையவை ஆதலின் அவற்றில் கடவுள் இல்லை என்று கூறுதல் இயலாது.

விண்ணு அல்லது விஷ்ணுவில் தோன்/றியதே சூறாவளி. அது  விண்ணனின் பிள்ளை என்பதில் எந்த முரணும் இல்லை.

நீரில் விழுந்திறத்தலே நீரக - நரகச் சாவு. நரகம் என்று ஒன்றில்லை என்று வாதிட்டால் அவரைக் கடலில் களைந்து அதை மெய்ப்பிக்கலாம். இன்று நீரகக் குண்டு என்ற ஹைட்ரோஜன் குண்டு வேறு உள்ளது. அதுவும் நரகமே. அது நீரின் அமைப்பாக உள்ளது.

திருத்தம் பின்

கருத்துகள் இல்லை: