இல் என்பது தமிழில் வீடு என்று பொருள்படும் இனிய சொல். ஆத்துக்காரி என்பதனை இல்லத்தரசி என்று சொல்கிறோம்.
இல் என்பது ஓர் உருபுமாகும். கண்ணில், காதில், தோட்டத்தில் வீட்டில் என்று இவ்வுருபு இடப்பொருள் தருகிறது.
இல்லை என்று பொருள்தரும் இல் என்னும் சொல் வேறு பொருளுடைய வேறு சொல். இச்சொல் பற்றி ஈண்டு பேசவில்லை.
ஆண்மகனை மணம்புரிந்து வீட்டுக்கு வரும் புதுப்பெண்ணை இலக்குமி என்றே சொல்கிறோம். நம் வீட்டுக்கு ஓர் இலக்குமி வந்திருக்கின்றாள் என்று எல்லோரும் மகிழ்வுகொண்டாடுவர். கிருகலெட்சுமி என்ற தொடரும் வழக்கில் உள்ளது. இலக்குமி வீட்டுக்கு நல்லனவெல்லாம் கொண்டுவருபவள்.
இலக்குமி:
இச்சொல்லில் இல் என்ற சொல் முன் நிற்கின்றது. இதைப் பிரித்தால்:
இல் : வீடு.
அ : அவ்விடத்து. அங்கு.
கு: சேர்விடம்.
உ = முன்பு.
மி : இது ம் மற்றும் இ என்ற இரண்டும் இணைந்த இறுதி. பூமி என்ற சொல்லுக்கு யாம் கூறிய விளக்கத்தை மனத்தில் இருத்திக்கொண்டு நோக்குக.
இதில் கு என்பதன் உகரம் கெட்டது,
இது " இல்லத்துக்கு வந்து சேர்ந்து முன் நிற்பவள் " என்பதாகிய பொருளைத் தருகிறது. இதில் வந்த இகரத்தைப் பெண்பால் விகுதியாகக் கொள்ளலாம். பூமி என்பதில் அஃறிணைக்குரிய விகுதி எனலே பொருந்துவது.
இலக்குமி என்ற இதே சொல்தான் இலட்சுமி என்றும் விரிந்து கிருகலெட்சுமி என்றும் வருகின்றன
இலக்கு என்ற சொல்லும் இழு இலு என்பவும் தொடர்புடையன. அவற்றைப் பின்னர் காண்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக