புதன், 12 செப்டம்பர், 2018

நீக்கமற நிறைந்த பூரணானந்தம்





பார்க்கின்றேன் பார்க்குமிடம்  எங்குமெங்கும் ---  ஒரு
நீக்கமற  நிறைந்துள்ளான்  மகிழ் பூரணன்;
மேற்கினிலே கிழக்கினிலே திசைஎட்டிலும் --- அவன்
மிசையிருப்பான் அகத்திருப்பான் இடமெங்கிலும்.
தூக்கமதில் இணைகையிலே தோய்ந்திருப்பான் --- இரு
தோற்றுருக்கள் தம்மிலுமே பகுந்தும்நிற்பான்;
ஆக்கத்திலும் வந்து  முன்நிற்கிறான் --- இந்த
அகிலமெல் லாமவனே அயிர்ப்பதில்லை.

பாடல்: சிவமாலா.
படங்கள் உதவியவர்: மோகன் (குருசாமி).

 அரும்பொருள்:

மிசை -  மேலே;    அகத்து -  உள்ளே;    எங்கிலும் -  எங்கேயும்;
பகுந்து  -  வெவ்வேறாக;    அகிலம் - உலகம்.
அயிர்ப்பதில்லை -  சந்தேகமடைவதில்லை.




இறைப்பற்றர் மோகன்
(ஐயப்ப குருசாமி)




கருத்துகள் இல்லை: