இன்று சிகரம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.
இமையத்தில் மிக்க உயர்ந்த உச்சி உடையது மவுன்ட் எவரஸ்ட் என்பது நம்மிற் பலருமறிந்ததே. உயர்ந்த உச்சியை மலைமுடி என்று ஒரு கவிஞர் வருணித்தார். அடி முடி என்னும் சொல்வழக்கு இருப்பதால் மலையின் இறுதியை முடி என்றதும் பொருத்தமே ஆகும்.
மலையில் ஏறி மேலே செல்லச் செல்ல அடி சிறுத்து, ஓரங்கள் அருகில் வந்துவிடும். இது யாவரும் அறிந்த ஒன்றே ஆகும். இதிலிருந்து எப்படி ஒரு சொல் அமைந்தது என்பது அறிதற்கு இனியதாகும்.
மலைமுடி நோக்கிச் செல்லச்செல்ல, ஓரங்கள் அருகில் வந்துவிடுகின்றன. அகலம் குறைந்துவிடுகின்றது அல்லது சிறுத்துவிடுகிறது.
சிறுகு : அடிசிறுத்தல்.
அருகு : ஓரங்கள் அருகில் வருதல்.
அம் : அமைவு காட்டும் விகுதி.
சிறுகு + அரு (கு) + அம் > சிறுகு அரம் > சிறுகரம் > சிகரம்.
கு + அ = க. உகரம் கெட்டது ( மறைந்தது).
அருகு > அரு. இங்கு குகரம் கெட்டது.
சிறு என்பதில் று கெட்டது.
இவ்வாறு வெட்டி ஒட்டி ஒரு புதிய சொல் கிட்டியது.
சுருங்கச் சொன்னால் சிறுகரம் என்பது சிகரம் ஆயிற்று.
"ஈடில்லா அழகின் சிகர மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்" - ஒரு கவிஞர்.*
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
குறிப்பு.
* கவி கா.மு. ஷெரீப் என்பர். தமிழ் முழக்கம்
இதழாசிரியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக