ஒரு சிறுபிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது, ஒரு சொல்லின் எல்லா எழுத்துக்களையும் வாசித்தபின்னரே அச்சொல்லின் பொருளை அப்பிள்ளை உணர்கின்றது. இதுவே வாசித்துப் பொருளுணர்தற்குப் பொருத்தமானது ஆகும். ஆனால் சொல்லின் ஆதிப்பொருளை அல்லது ஆக்கப் பொருளை உணரவேண்டுமானால் - அதாவது சொல்லாய்வில் ஈடுபட வேண்டுமானால் - அதன் முதல் ஒன்றோ இரண்டோ எழுத்துக்களை நோக்கினால் அது புரிந்துவிடுகிறது. அது எப்படி என்று நீங்கள் கேட்கவேண்டும். ஏனெனில் நாம் காண முற்படுவது ஆதிப் பொருண்மையையே. சொற்களைப் பிறப்பித்தோர், ஓர் அடிப்பொருளை அடைந்தே சொல்லின் உருவாக்கத்தைக் கண்டறியத் தொடங்கினர் . மாறாக, பெரும்பாலும் ஒரு சொல்லை முன்வைத்துக்கொண்டே அச்சொல்லின் தோற்றத்தை முழுமையாக அறிந்துவிட முடிவதில்லை. ஒரு சொற்குடும்பத்தையே ஒருசேர நோக்கித்தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
உலகில் பொருள்கள் பலவும் பல்வேறு உருவில் உள்ளன. சில உருண்டையாய் உள்ளன. சில சப்பட்டையாய் ( இடப்பரவலாய்) உள்ளன. இன்னும் உருவங்கள் பல. இடப்பரவலாய் உள்ள உருப்பொருளும் உருவற்ற பொருளும் பற்றிய பல சொற்களும் பகரத்திலே தொடங்குதல் காணலாம். இதனைச் சில எடுத்துக்காட்டுகளால் நாம் உணரமுடிகிறது.
பரமன் - பர - எங்கும் பரவலாய் உள்ள ஆனால் காணவியலாத உலகாளும் ஒரு பொருள். [ பர என்ற இரண்டு எழுத்துக்களை அறிந்தவுடன் சொல்லின் ஆக்கம் தெரிந்துவிடுகிறது ]
பலகை - பல - சப்பட்டை நிலையில் உள்ள ஒரு மரப்பொருள். இடப்பரவல். காரணம் ஆய்ந்தாலே தெரிகிறது.
பனி - பன் - பரவலாக வான் தெளிக்கின்ற சிறு குளிர் திவலைகள்
பலி - பல் - ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்களைப் பலவிடங்களிலும் கொல்லும் முறை. ( இடப்பரவலும் செயற்பரவலும் காலப்பரவலும் )
(ஆறிலும் சாவு, நூறிலும் சாவு - பழமொழி).இது காலப்பரவல்.
பரிப்பெருமாள் - பரி - எங்குமுள்ள பெருமாள். இடப்பரவல், காலப்பரவல்.
பர > பரி. பரி என்பது குதிரையையும் குறிப்பதால் குதிரையில் வரும் பெருமாள் என்றும் கூறுதல் உண்டு. இது கடவுள் தன்மையை விளக்காமல் ஒருவாறு தொன்மப் பாணியை முன்வைக்கிறது.
பரிபாடை பரவலாக பயன்படுத்தப் படும் பேச்சு.
பரணி -பர. மேலே இடப்பரவலாக அமைக்கப்படுவது.
பார் - பரந்த இவ்வுலகம் (வியனுலகம்)
பார் (< பர )
பஞ்சு பறந்து ( பரந்து) பரவும் மெல்லிய பொருள்
ப > பர் > பர > பார்.
பர் > பல்.
பல் > பன். இவ்வாறு அடிச்சொல்லும் திரியும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக