செவ்வாய், 22 டிசம்பர், 2015

சுதந்திரத்தில் தமிழ்

பழந்தமிழில் சொம் ( property)   என்ற  ஒரு சொல் இருந்தது.  இந்தச்
சொல்லிலிருந்து சொம்தம்  என்ற சொல் ஏற்பட்டது. சொம்தம்  சொந்தம் ஆயிற்று. இது வல்லெழுத்துப் பெற்று சொத்து ஆனது. சொத்து என்பதன் அமைப்புப் பொருள் ஒருவனுக்கு சொந்தமான பொருள் என்பதே

( சொம்  + தம்   :   இதைத்  தம்முடைய  சொம்  என்று  முறைமாற்றிப்  பொருள் கொள்ளவேண்டும் . This is a reverse word formation technique.   ஆனால் நாளடைவில்  "தம் "  தன்  பொருளை இழந்து  வெறும் விகுதியாகப் பயன்பட்டது,  .

சொம் தன் திறம்  என்றால் தானே திறமாக நிற்றல், அதாவது . சொத்துப் பற்றோடு நிற்பது ;  செல்வமில்லாது   நிற்றல் , ஒரு நிற்றலன்று. எனவே  சொம்  முன் நின்றது  மிகப் பொருத்தம் ., 

சொம்  வெறும் சொ என்று  குறைந்து சொ +தம்+  திறம்  சொதந்திரம் என்று பேச்சு வழக்கில் வந்து  பின்  சுதந்திரம் என்று திருத்தப்பெற்று அயற்சேவை செய்யத் தொடங்கி ஓர்  உயர் நிலையை அடைந்தது.

சொம் >  சொ >  சொ + து  >  சொத்து . இங்கும் சொ என்று குறைந்துதான்  சொத்து ஆனது.  சொ தம் திறம்  என்பது  உண்மையில்  ஒரு தொடர். இப்படி  முன் நிற்கும் சொல் கடைக்குறைந்து  சொல்  அமைந்த இடங்கள்  என் முன் இடுகைகளில்  கண்டுகொள்க.

திறம்  திரம் சொல்லமைப்பில் ஒரு போலி,
சொ
இதில் முழு விளக்கத்தையும் நேரம் கிடைக்கையில் எழுதுவேன், 

சுதந்திரத்தில் தமிழ் ......................

" ஆனந்த  சுதந்திரம் அடைந்துவிட்டோம்  என்று  ஆடுவோமே" 
(பாரதி பாடல்)

"சுதந்திரக் கொடி  பறந்திடப் பார்,   சூழும்  இருளும்  ஒழிந்திடப் பார்"
(  ஓமந்தூர்  ரெட்டி பாடல் ). 

பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (பாரதி. தேசீய. 42)

இது  பல்வேறு  பொருட் சாயல்களை உடைய சொல்.   political independence   என்பது  அவற்றுள்  ஒன்று .   இச்சொல்லின்  தொடக்கப் பொருள்  தான் சொத்து வைத்துக்கொண்டிருப்பதற்கு  உள்ள   திறம்  அல்லது  உரிமை  அல்லது அரசால்   விடப்பட்ட  நிலையே  ஆகும். பின்னர்   இன்னொன்று  ஈவித்துக்கொடுக் கும் சுதந்திரம்.  மற்றொன்று  நெற்களத்தில் குடிமக்கள் முதலியோர்பெறுஞ் சுதந்திரம். (J.)     இப்படிப்   பொருட் சாயல்கள் விரியும் .

கருத்துகள் இல்லை: