மிதம், அமிதம் என்ற சொற்களின் அமைப்புப் பற்றி முன்பு எழுதியுள்ளேன்.
மிதத்தல் என்பது தமிழில் உள்ள வினைச்சொல் . இதிலிருந்து:
மித + அம் = மிதம் என்ற சொல் பிறந்தது. மித என்பதன் ஈற்று அகரம் கெட்டது (மறைந்தது).
கனம் இலாதது மிதக்கும். கனமானது மூழ்கும். மிதமானது என்றால் அளவுடன் அமைந்தது, கனமாகி மூழ்கிவிடாதது என்று அறிக. இது படகோட்டிகள் , கப்பலோட்டிகள் ஆகியோரின் பயன்பாட்டிலிருந்து வந்துள்ளது என்பது தெரிகிறது.
இது பின் தனது அமைப்புப் பொருளினின்றும் விரிந்து பொதுப்பொருளில் வழங்கிற்று. moderate என்று இதுபோது பொருள் தருகிறது.
இந்தப் பொருட்கு எதிராக அமைந்தது "அமிதம்" என்பதாகும். அமிழ்தல் என்ற சொல்லுடன் இதற்குள்ள தொடர்பு கண்டறியத்தக்கது. அமுக்கு என்ற சொல்லையும் மறந்துவிடலாகாது.
அமிழ் > அமிழ்தல் > மிழ்த > மித. ஆகவே அமிழ் x மித.
மித > மிதம் .
மித > மிதத்தல்.
மி என்பதோ மே எனற்பாலதுடன் தொடர்பு உள்ளது . மி> மே > மேல்.
அமிழ் > அமிழ்தல் > அமித.
மித x அமித அ என்பதை எதிர்ச்சொல்லாக்க முன்னொட்டாகக் கொண்டாலும் இழுக்காது என்று அறிக. அல் > அ . கடைக்குறை .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக