சோதனைக்
கெதிராகக் கிளர்ந்து போராடுதலும்
வெற்றி கொள்ள முயலுதலும்
ஆகிய செயல்முயற்சிகளைக்
குறிப்பதாகக் கூறுகின்றனர்.
ஒருவனை சோதனைக்கு
உட்படுத்துதலையும் இது
குறிக்கும் என்பர்.
பண்டை
அரபியில் இதன் பொருளுக்கும்
தற்கால அரபியில் இதற்குள்ள
பொருளுக்கும் வேறுபாடுகள்
உண்டு என்று சொல்லப்படுகிறது.
பொதுச் சொன்னூற் ( general lexical ) பொருளையும் தனியே கருதுதல்
வேண்டுமென்பர்.
இது 34
முறை ஃபித்னா என்றே
முழுச்சொல்லாக திருக்குர்
ஆனில் பயன்பாடு கண்டுள்ளது.
26 முறை பல்வேறு தொடர்புடைய வினைச்சொல்
வடிவங்களில் அந்நூலில்
வந்துள்ளது என்பர் குர் ஆனில்
புலமை பெற்றோர்.
Temptation, trial; sedition, civil
strife, of a ‘trial’ (or ‘temptation’) , in the sense of ‘testing’ someone.
என்றெல்லாம் ஆங்கில
எழுத்தாளர்கள் பொருள்
கொண்டுள்ளனர்.
நிலையான
அரசாட்சியில் அமர்ந்துள்ளோனை
எதிர்த்து நிற்றலையும் இது
உள்ளடக்குமாம். ஆனால்
கிளர்ச்சிக்கான காரணங்கள்
அல்லது அடிப்படைகளை இது
குறியாதென்பர்.
"Fitnah is also commonly used
in the accusatory meaning of the word, esp directed at people who
seek to create schisms or exacerbate schisms within the Muslim
community as a whole."
என்றும்
அறிந்தோர் கூறுவர்.
வரலாற்றில் நெடுநாட் பயன்கண்டுள்ளதும் பலவேறு பொருட்சாயல்களையுடையதுமான ஒரு சொல்லை மொழிபெயர்த்துத் தமிழில் தருதல் அத்துணை எளிதென்று கூறிவிட இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக