சென்னை வாசிகள்,
மிகுந்த நெஞ்சுரம் கொண்ட மக்கள்.
ஊரையே உருட்டிப் புரட்டிப் போட்ட வெள்ளத்தில்
உள்ளே வீடுதேடி வந்த பம்புக்குட்டியை
ஈரத் துணியை முறுக்கிப் பிழிவதுபோல்
சூரத் தனமாய்த் திருகிக் காட்டுகிறார்கள்.
ஒரு சாலை மேம்பாலத்தைத் தொட்டுச் செல்லும்
பெருவெள்ளமும் ஏற்படக் கூடுமென்பதை
இப்போதுதான் கண்டிருக்கிறோம்.
உயிரிழப்புகளும் பொருளழிவுகளும் நேர்ந்து
பஞ்சு படாத பாடு படுகின்ற மக்களையும் காண
நெஞ்சு சுக்கு நூறாகிவிடும்
உணவுப் பொருளும் உதவிப் பொருளும் கொண்டுவந்தோரை
உதைத்தனர் சிலர்; அது
பதைத்து நிற்கும் மக்களை
மறைத்து முன் நிற்கும் காட்சி !
இதைத் தானா நாகரிகம் என்பது?
விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி
துன்பம் களையப்பட்டு
அன்பு நிலையமாய்ச்
சென்னை செழிக்க
இன்னருள் இறைவன் தருக .
.
மிகுந்த நெஞ்சுரம் கொண்ட மக்கள்.
ஊரையே உருட்டிப் புரட்டிப் போட்ட வெள்ளத்தில்
உள்ளே வீடுதேடி வந்த பம்புக்குட்டியை
ஈரத் துணியை முறுக்கிப் பிழிவதுபோல்
சூரத் தனமாய்த் திருகிக் காட்டுகிறார்கள்.
ஒரு சாலை மேம்பாலத்தைத் தொட்டுச் செல்லும்
பெருவெள்ளமும் ஏற்படக் கூடுமென்பதை
இப்போதுதான் கண்டிருக்கிறோம்.
உயிரிழப்புகளும் பொருளழிவுகளும் நேர்ந்து
பஞ்சு படாத பாடு படுகின்ற மக்களையும் காண
நெஞ்சு சுக்கு நூறாகிவிடும்
உணவுப் பொருளும் உதவிப் பொருளும் கொண்டுவந்தோரை
உதைத்தனர் சிலர்; அது
பதைத்து நிற்கும் மக்களை
மறைத்து முன் நிற்கும் காட்சி !
இதைத் தானா நாகரிகம் என்பது?
விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி
துன்பம் களையப்பட்டு
அன்பு நிலையமாய்ச்
சென்னை செழிக்க
இன்னருள் இறைவன் தருக .
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக