திங்கள், 14 டிசம்பர், 2015

சிவஞான போதம் பாடல் 3

சிவ ஞான போதத்தின் மூன்றாவது பாடலைக் கண்டு மகிழ்வோம்,

உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மை உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா.

ஆன்மா உள்ளது, ஆன்மா இல்லை என்று இருவிதமாகப் பேசப்படுகிறது ஆன்மா இருக்கிறது.

எனது உடல் என்றும் சொல்வர். எனது எனப் படுதலால் நான் என்பது இவ்வுடல் ஆயின் என் உடல் என்று கூறுவதென்ன? நான் என்பதில் வேறுபட்டதாகவன்றோ உடலைச் சொல்கின்றனர். ஆகவே நான் உள்ளேன்; எனக்கு உடலும்  இருக்கிறது. நான் என்பது உடலினை வைத்திருக்கும் ஆன்மா ஆகிறது.   ஆன்மா  தேகி .  தேகத்தை உடையது,

கனவின்போதும்  ஐம்புலன்களும் ஒடுங்கி விடுகின்றன.அப்போது நான் இருக்கிறேன்,( உடல் செயலற்றுக் கிடக்கிறது. உறங்குவது போலும் சாக்காடு., இரண்டும் ஒப்புமை உடையன ) ஆதலின், உடலின் வேறான ஆன்மா இருக்கிறது.


உறங்குங்கால் உண்ணுதல் முதலிய ஏனைச் செயல்கள் நடைபெறுவதில்லை. நன்மை தீமைகளைப் பட்டறிய முடிவதில்லை. ஆனால் மூச்சு ஓடுகிறது. அதனாலும் ஆன்மா உள்ளது. மூச்சு வேறு; ஆன்மா வேறு.



யாராவது ஒன்றை நமக்கு உணர்த்தினால் அதனை நாம் உணர்ந்துகொள்கிறோம். அதனாலும் ஆன்மா உள்ளது என்பர் . ஒரு அறிவியலாளர், தாம்  அனுப்பிய துணைக்கோளம் செவ்வாயில் இறங்கிற்று என்கிறார். அவர் சொன்னதும் உங்களுக்கு விளங்குகிறது. அது புரிந்தது உங்களுக்கா? அல்லது உங்கள் உடலுக்கா? உணர்த்தியவுடன் நீங்கள் உணர்ந்தீர்கள் . ஆகவே உங்கள் உடலின் வேறான உங்கள் ஆத்மா உள்ளது. தற்கால முறைப்படி ஒரு மனிதனின் மூளையை அறுவை செய்து தேடினால் இந்த உணர்ந்த செய்தியை மூளையின் அணுத்திரள்களில் கண்டெடுக்க முடிவதில்லையே. அது  எங்கு பதிவாகியது

இவற்றை விளக்குகிறது இந்தப் பாடல். இதன் பொருளை அடுத்த இ
டுகையில் ஆராய்வோம் .
will edit 

கருத்துகள் இல்லை: