சிவஞான போதம் 3-ம் பாடலின் முன்னுரை இவ்விடுகையில் http://sivamaalaa.blogspot.sg/2015/12/3.html கண்டு மகிழ்ந்தோம்.
இப்போது அதன் பொருளை அறிந்துகொள்வோம்.
இப்போது அதன் பொருளை அறிந்துகொள்வோம்.
உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மை உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா.
உடம்பு கண்ணால் காணப்படுவது ஆகும் . ஆனால் ஆன்மாவோ கண்ணுக்குப் புலப்படாததாய் இருக்கின்றது. புலப்படும் உடலைக்கொண்டு புலப்படாத ஆன்மா வை அறியும் வழியை இப்பாடல் தெரிவிக்கிறது. இதை அனுமானப் பிரமாணம் என்பர் பணடிதன்மார்.
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா உளது. - மாயையின் விளைவினால் இயங்குவதாகிய இவ்வுடம்பினுள் ஆன்மா இருக்கின்றது . மாயை காரணம்; உடம்பு காரியமாகிறது,
தனு என்பது உடல். தன் + உ = தனு , தன் - தன்னுடைய . உ என்பது உடல் என்பதன் முதலெழுத்து . தன் + உ , இரண்டும் கூட்டி தனு ஆனது. ஒரு முழுச் சொல்லும் ஒரு குறைச்சொல்லும் கலந்த கலவை. தனு எனவரும் வேறு பொருள்தரு சொற்களும் உள்ளன. அவை வேறு இது வேறு. ஆகவே தனு - ஒரு இனிய புனைவுச் சொல் ஆகின்றது. தன்னுடல் என்பதை ஒரு மறைமுக வழியில் குறிப்பிடுவது. தேகம் (தேய்+கு+ அம் = தேய்கம் > தேகம் ) தேய்தல் உடையது ; அழிவுடையது . அழி உடலில் அழியா ஆன்மா உள்ளிருக்கிறது. இதைச் சற்று மறைவாகத் தனு என்றது மிக்கப் பொருத்தமாகும்.
இலது என்றலின் = இல்லை என்று சொல்வதனால் .
இல்லாததை எப்படி இல்லை என்று சொல்வது? ஆன்மா இல்லை என்று சொல்லும் போதே ஆன்மா என்ற சொல் வந்துவிடுகிறதே , உலகம் அறியாத ஒன்றைக் குறிப்பிட்டு அதை இல்லை என்று சொல்ல இயலாது. முடியுமா என்று பாருங்கள்.
எனது உடல் என்றலின் = என்னுடைய உடம்பு என்று சொல்வதனால் .
இவ்வுடல் ஆன்மாவின் உடைமை என்பது பொருள் ஆகிறது அன்றோ.?
ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின் - கனவின் போது கண், மூக்கு, செவி வாய், தோல் (மெய் ) ஆகியவை ஒடுங்கி விடுகின்றன. ஐந்து உணர்ச்சிகளும் ஒடுங்கிப் போகின்றன. ஆன்மா இருப்பதனாலன்றோ இப்படி நடக்கிறது என்றபடி. சமாதி பழகும் போதும் ஐம்புலன்களும் ஒடுங்கி விடுகின்றன. உடல் கட்டைபோல் கிடக்கிறது. அப்போது அறிவதனால் .(ஆன்மா உள்ளது )
சமாதி < சம + ஆதி. ஆதியில் ஓர் உடலினுள் ஆன்மா இருக்கவில்லை. அது பின்புதான் உடலை எடுத்தது. அது ஆதி நிலைக்குத் திரும்புதல் போல உடலினின்றும் ஆன்மா பிரிந்து எழுந்து நிற்பதே சமாதி. ( நிருவிகற்ப சமாதி முதலியவை நோக்குக ). ஆதியின் ஒத்த சம நிலை சமாதி.
கண்படில் உண்டிவினை இன்மை உணர்தலின் = கண் படும்போது (உறங்கும்போது) உணவு மற்றும் வேறு எல்லாமும் விட்டு க் கிடக்கிறோம். உடல் அற்ற நிலையைப் போல ஆதலினால்.
கண்படல் = உறங்குதல்.
உண்டி வினை : இது உண்டியும் வினையும் என்று உம்மை (உம் என்ற இடைச்சொல் ) விரியும். எனவே உண்டி வினை என்பது உம்மைத் தொகை . உண்டி - உணவு. வினை - உடலுக்குத் தேவையான மற்றெல்ல்லா நுகர்வுகளும், (போகங்கள் யாவும் ), உடல் உடையவன் வேண்டிப் போகும் யாவும் போகங்கள். ஆகவே வினை என்பது ஏனைப் போகங்கள் என்று பொருள்தரும்,
இவ்வாறு ஆன்மா உள்ளதென்பதை சிவமதம் நிலை நாட்டுகிறது,
இது ஆன்மா இல்லை என்றாருக்கு அறிவுறுத்துவதாகிறது.
ஆன்மா இல்லை என்போனுக்குச் சூன்யாத்மவாதி என்று பெயர்.
எனது உடல் என்பவனுக்குத் தேகாத்மவாதி என்று பெயர்.
ஐம்புலன் அன்றிப் பிறிதில்லை என்போன் இந்திரியாத்மவாதி
கண்படுதல் காலத்து அறிதல் ஒப்பாதவன் பிரணாத்மவாதி.
உணர்த்த உணர்தலின் ஆத்மா உண்மை மறுப்போன் அஞ்ஞானாத்மவாதி.
தான் ஆத்மா இல்லை என்பதால் தான் இறந்தபின் ஒன்றுமி ல் லை என்பான் சூன்யாதமவாதி .
இவர்கள் கொள்கைகளையெல்லாம் இந்நூல் மாறுத்து நிற்கின்றது.
Some typos corrected and re edited. Some virus has made changes , These have been reverted. கண்படும்போது not காணப்படும்போது. Pl note comments if any by readers do not reach us.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக