வியாழன், 3 டிசம்பர், 2015

சாமர்த்தியம்

இப்போது சாமர்த்தியம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

இதனை சா+ மரு(வு) +  து + இயம் என்று பிரிக்கவேண்டும்.

ஒரு மனிதன் சாவை மருவி நிற்கும் சூழ்நிலையிலும் எதிர் நீச்சல் போட்டு, அந் நிலையினின்று
வெற்றிகரமாக விடுபட்டு, இயல்பு நிலைக்குத் திரும்புவதே சாமர்த்தியம் எனப்படும்.

சொல் இக் கருத்தில் புனையப்பட்டபின்,  ஏனைத்  திறன் வேண்டும் சூழ்நிலைகளையும் குறிக்க வழங்கப்பட்டுப்,
பொருள் விரிவடைந்தது.

இப்போது சொல்லமைப்பை  மீண்டும் கவனிப்போம்.

சா + மரு + து+  இயம்.

சா + மருத்து + இயம்.

சா + மர்த்தியம்

சாமர்த்தியம்.

இயம் என்பது ஈண்டு விகுதியாய்ப் பயன்படுகிறது.  எனினும் இவ்விகுதி  இயங்கு என்பதன் அடிச்சொல்லும் ஆகும்.   சாவு மருவு நிலையிலும் இயங்கி வெல்லுதல் என்று  இயம் என்பதற்கும்  பொருள் விளங்கும்படியாக  அமைந்துள்ளது  அறிந்து மகிழற்பாலதாம். பின் நாளில்  இயம் என்பது வெறும் விகுதியாகவும்  சொல்லமைக்கப் பயன்படுவது காணலாம்.

து என்பது பலசொற்களில் இடை நின்று சொல்லமையும்.  எ-டு:  பரு (த்தல்) +  (அ)து +   அம்  =  பருவதம்.  பரிதாகிய மலை,  1

சொல் அமைந்த விதமே இங்கு விளக்கப் பட்டது.   அமைந்த சொல் எம்மொழிக்குரிய து என்பதை  இவ்விடுகை தொடவில்லை.  இச்சொல் தமிழிலும் வழங்குவது.

இதனை  வேறு வழியிலும் விளக்கலாம்,    ஆங்கு புகாது விடுப்போம், 2


-----------------------------------------------------------------------------------------------

Notes:

1.   அது , இது  என்பன  "து "  வெனக்    குறைந்தியலும் . மலாய்  மொழியிலும் இங்ஙனம்   தலைக்குறையும்.  cf.   itu  >  tu.   e.g.  Sakitnya tu  disini.  (Cita Citata ). இது  (Tamil) =   itu  (Malay)  >  tu.   In English :   it is  >  'tis  (in poetry).   இது  (Tamil)  compares with  it (English).  There is no doubt Tamil இது  is original.

2.  சம(ம்) +  ஆர்த்து  +  இயம்  = சா மர்த்தியம் ;   ஆர்த்தல்  (வினைச்சொல் ).. 
also  சம + அறுத்து +  இயம் .   அறுத்தல் (வினைச்சொல் ). In each case 'sama'  would be shown to have become elongated as  'saama'.  On the other hand,    ஆர்த்து    shortened to  அர்த்து.   &  அறுத்து   transformed  to  அர்த்து. respectively  in such proposals.

கருத்துகள் இல்லை: