இனி ஆசை என்னும் சொல்லைச் சற்று நோக்குவோம்.
அழகிய ஒரு பூவினைக் கண்டு மனம் அதன்பால் அசையாதிருக்குமாயின் அதன்மேல் அம்மனிதருக்கு "ஆசை " இல்லை என்போம். அழகிய பூவிற்கும் அசைந்து கொடுக்கா மனம். அசையுமாயின் அதுவே ஆசை ஆகும் .
இந்த அசைவைத்தான் "சலனம்" என்றும் சொல்வார்கள்.
படு என்ற வினைச்சொல் நீண்டு "பாடு" என்று பெயர்ச்சொல் ஆகும். இது முதனிலை நீண்ட தொழிற்பெயர் எனப்படும் .
அதேபோல் அசை நீண்டு "ஆசை" ஆகும்.
ஒன்றை நோக்கி மனம் அசைதல்.
இந்தச் சொல் கொஞ்சம் திரிந்து, பின்பு தேசிய சேவையில் ஈடுபட்டுவிட்டது. இது ஒரு பேச்சு வழக்குச் சொல். பிற்காலத்தில் நூல்களில் இடம்பெற்றதாகும்.
"இவர் எத்துணை அழகிய பெண்ணுக்கும் அசைந்துகொடுக்காத ஞானி " என்று பேசிக் கேள்விப் பட்டதில்லையா?

ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
ஆளினுங் கடல்மீதிலே
ஆணைசெல வேநினைவர் அழகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவது மாகமுடியும்
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனத்தற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. [ தாயுமானவர். பரிபூர.10]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக