பட்சணம் என்பது காண்போம். இலையில் சோறு, குழம்பு முதலானவற்றுக்குப் பக்கத்தில் வைக்கப்படுவது பக்கணம் > பட்சணம்.
பகு+ அம் = பக்கம்.
பகு+ அணம் = பக்கணம்.
பின் பக்கணம் > பச்சணம் > பட்சணம் ஆயிற்று.
அணம் என்பது ஒரு விகுதி. கட்டு+ அணம் = கட்டணம் போல அணம் என்னும் விகுதி பெற்றது பக்கணம்.
அணம் என்னும் விகுதி அண் என்னும் அடியிற்றோன்றியது.
அண் > அண்மு(தல்.)
அண் > அண்மை.
அண் > அணிமை.
அண் > அண்டுதல், அண்டை.
அண் > அணு
அண் > அணுகு(தல்)
அண் > அண்டி (பழத்தை அடுத்திருப்பதாகிய முந்திரிக் கொட்டை)
எனப்பல
அண்டா: ஆக்கியவற்றை கொட்டிவைக்க அடுப்புக்கு அண்டையில் வைக்கப்படும் பெரிய பாத்திரம். பின் அண்டாவும் ஆக்கப் பயன்பட்டது,
விகுதிகள் ஆதியிற் பொருளுடன் நின்றவை எனினும் பின் தம் பொருளிழந்து வெறும் சொல்லாக்கத்துக்குப் பயன்பட்டுள்ளன, அதனால் சொற்கள் பல்கிட வழியேற்படலாயிற்று.
பச்சை என்பது இங்கு காய்கறிகளைக் குறிக்கும் என்றும் "அணம்" பின்னொட்டுப் பெற்று பச்சணம் ஆகி, பின் பட்சணம் ஆயிற்று என்பாரும் உளர்.
இப்போது பச்சணம் (பட்சணம்) பலவகை உணவுகளையும் குறிப்பதாக விரிந்துள்ளது. எ-டு : கேரளீய பட்சணம் .Here they meant Kerala Cuisine or kinds of kerala food.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக