.
விசு > விசும்பு (ஆகாயம்)
விசு என்பதே அடிச்சொல்.
விசு எப்படி அமைந்தது என்பதைக் கூறுகிறேன். பின்பு.
நுணுகி ஆய்ந்தால், விசும்பு என்ற வெட்டவெளியில் உலகம் உள்ளது. பல கோடி யண்டங்களும் உள.
விசு என்ற அடிச்சொல்லை எடுத்து உலகம் என்பதற்கு ஒரு சொல்லை உண்டாக்கியதும் அறிவுடைமையே ஆகும்.
விசு > விசு + அம் > விசுவம். விசுவம் > விஸ்வ(ம்).
மனத்தில் இருப்பவன் கடவுள். மனத்திலேயே இருந்துவிட்டால் எப்படி? நாவில் வெளிப்படுகிறவன். இயல்பாகவே அதுதான் நடக்கும். கண்ணில், காதில் வெளிப்பாடு காண்பானோ? மக்களிடையே அவன் நாவில் வெளிப்படுவான்.
மாய ஆற்றல்களை உடையோனிடம் மற்ற இடங்களில் வெளிப்படுவானேல், அது இயற்கையை மிஞ்சியதாகும். நாம் அதைப்பற்றிப் பேசவில்லை.
தன் நாவில் வெளிப்படுவான்: தன் + நா ( முறைமாற்றி ) நா+தன் = நாதன்.
நாவில் வருவது அடிப்படை நாதம். மற்ற நாத வெளிப்பாடுகளை அறிவு முற்றிய நிலையில் மனிதன் அறிந்தான்.
நாவினின்றும் (கூப்பிடுவதே) நாமம் ஆகும்.
விசுவ நாதன் என்றால், விசும்பிலும் உலகிலும் உள்ளான், உங்கள் நாவில் வெளிப்பாடு காண்கிறான் என்பது.
நாதன் நாமம் நமச்சிவாயவே . ஒரு பேரும் ஓர் ஊருமில்லாதவன் அவனை நாமத்தால் நாவினால் கூவி அறிகிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக