செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

தஞ்சைப் பெரிய கோவில் பெருவுடையார்

அரசர்க்கரசனான இராஜராஜன் கட்டியது தஞ்சைப் பெரிய கோவில். அது பின் பெருவுடையார் கோவில் எனப்பட்டது.  இது பெரிய கோவிலென்பதை வேறு  சொற்களால் புனைந்தமையாகும்.

பெருமை + உடையார் > பெரு+ உடையார் > பேருடையார் என்று இலக்கணப் படி சென்றால், வேண்டியவாறு சொல் அமையவில்லை. மேலும் பெயர் என்ற சொல்லும் பேர் என்று திரிவதால், இலக்கணம் இங்கு உதவவில்லை.

பெரு என்பதை பேர் என்று திரிக்காமல், பெரு என்றே நிறுத்தி  உடையார் என்பதற்கு வகர உடம்படு மெய் கொடுத்து அமைத்தது ஒரு சொல்லாக்கத் திறம்தான். இச்சொல் அமைத்தவர்களைப் பாராட்ட வேண்டும்.

பெருவு > பெருவுதல் என்றோரு சொல் உண்டு. பெருவுதல் என்றால் உறக்கத்தில் பேசுதல். பெருவுடையார் என்பதில் வரும் பெரு வேறு, பெருவு வேறு.

கருத்துகள் இல்லை: