இனிக் கௌளி என்ற சொல்லைப் பார்ப்போம்.
இதனை நீங்கள் இந்தோஐரோப்பிய மூலச் சொற்களின் அகரவரிசையில் தேடிப்பாருங்கள். சங்கதத்தில் kIlAlin என்றொரு சொல்லும் உளது. இது கௌளியுடன் தொடர்பு பட்டதாகத் தெரியவில்லை. கீலா தமிழில் கௌளி ஆயிற்று என்று வாதிக்கலாம்.
கௌளி பூச்சி புழுக்களைக் கௌவித் தின்கிறது. அதற்குப் பல் இல்லை. கவ்வி உள் இழுத்துக்கொள்கிறது. கவ்வு முன், நாக்கை நீட்டுகிறது என்றாலும், ஒரு சொல்லுக்குள் எல்லாச் செயல்களையும் படம்பிடித்தமாதிரி வரணிக்கத் தேவையில்லை, சொற்கள் அங்ஙனம் அமைவது அரிதாகும்.
கவ்வு + உள் + இ > கவ்வுளி > கவுளி. வகர ஒற்று இடைக்குறைந்துள்ளது,
இது கவ்வி விழுங்குகிறது என்பதே பெயர்க்காரணம். அதாவது மெல்லப் பல் இல்லை. ஆகவே கவ்வு+ உள்+ இ. உள் என்பது உண் என்பதனோடு தொடர்பு உடையது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக