(These are in different meters )
கடவுளை நம்பவில்லை --- சிலர்
கணித்தறி சோதிடம் நம்புவ தில்லை.
இடர்வரும் வந்தபோதும் --- விழுந்
திறைவனின் ஆசிகள் வேண்டுவ தில்லை!
பற்றனும் துன்புற நேரின் --- அவன்
பளுவினை ஏற்றிடப் பக்கலில் தெய்வம்!
உற்றதை ஒற்றையாய் நின்று --- துன்பம்
உழந்திடும் ஓர்சுமை அன்னவற் கில்லை.
இல்லெனில் ஏதுதுணை---அவன்
இதயமும் வீழ்ந்திடும்; எழும்புவ தெப்படி?
கல்வரு நீரினில்போல் ---- விழும்
காணவும் கிட்டாது மீளவும் ஒட்டாது.
சோதிடம் பொய்யெனிலோ --- இனித்
தோன்றுவ தெங்ஙனம் கூறுதல் கூடும்?
வாதிடு வாய்க்கிடமோ --- இன்றி
வருவது சரிபட வரைவது மெப்படி?
தெய்வமும் இல்லையென்றால் --- மனிதன்
செய்வதிற் கேள்விகள் கேட்பாடும் ஒன்றில்லை;
வைவதும் வதைகொலையும் --- ஆனவை
செய்பவர்க் கோர்தடை இவவுல கத்திலை
இன்மையும் உண்மையெனில் --- நீவிரும்
ஈண்டு தொழுவதில் மூண்ட செலவுள ;
உண்மையில் உண்டெ னிலோ --- தெய்வம்
உமக்கொரு தண்டனை தரக்கெடும் யாவுமே!
குறிப்பு: இங்கு வெண்டளை பின்பற்றவில்லை; மேலும் மனத்துள் தோன்றிவந்த சந்தங்களையும் மாற்றி அமைக்காமல் எழுதப்பட்டுள்ளது.
கடவுளை நம்பவில்லை --- சிலர்
கணித்தறி சோதிடம் நம்புவ தில்லை.
இடர்வரும் வந்தபோதும் --- விழுந்
திறைவனின் ஆசிகள் வேண்டுவ தில்லை!
பற்றனும் துன்புற நேரின் --- அவன்
பளுவினை ஏற்றிடப் பக்கலில் தெய்வம்!
உற்றதை ஒற்றையாய் நின்று --- துன்பம்
உழந்திடும் ஓர்சுமை அன்னவற் கில்லை.
இல்லெனில் ஏதுதுணை---அவன்
இதயமும் வீழ்ந்திடும்; எழும்புவ தெப்படி?
கல்வரு நீரினில்போல் ---- விழும்
காணவும் கிட்டாது மீளவும் ஒட்டாது.
சோதிடம் பொய்யெனிலோ --- இனித்
தோன்றுவ தெங்ஙனம் கூறுதல் கூடும்?
வாதிடு வாய்க்கிடமோ --- இன்றி
வருவது சரிபட வரைவது மெப்படி?
தெய்வமும் இல்லையென்றால் --- மனிதன்
செய்வதிற் கேள்விகள் கேட்பாடும் ஒன்றில்லை;
வைவதும் வதைகொலையும் --- ஆனவை
செய்பவர்க் கோர்தடை இவவுல கத்திலை
இன்மையும் உண்மையெனில் --- நீவிரும்
ஈண்டு தொழுவதில் மூண்ட செலவுள ;
உண்மையில் உண்டெ னிலோ --- தெய்வம்
உமக்கொரு தண்டனை தரக்கெடும் யாவுமே!
குறிப்பு: இங்கு வெண்டளை பின்பற்றவில்லை; மேலும் மனத்துள் தோன்றிவந்த சந்தங்களையும் மாற்றி அமைக்காமல் எழுதப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக