தீமை யகல் வாழ்வு மேற்கொண்டு ----- தாமுயர்ந்த
மேதக்க நல்லோரும் பல்லோர் உளர்காண்பாய்
நாதக்க வாறுயர்த்து வாய்.
வீட்டில் நயம்பேசி நண்பாகி க் காணாமல்
கூட்டில் புகுநாகம் போல்முட்டை -----ஓட்டுடைப்பில்
உள்ளவை உண்பாரைக் காண்பிடி ஓர்படம்
உள்ளதைக் காட்டி விடும்.
உரை:
தாமாய் - யாரும் சொல்லாமலே; தாரணி - உலகம், தாரணி என்றால் வாழ்வுக்கு அனைத்தும் தரும் அழகினை உடையதாகிய உலகம். தீமை அகல் வாழ்வு - கெடுதல் இல்லாத வாழ்வு; தாம் உயர்ந்த - உலகில் தாம் மேன்மை கண்ட ( நல்லவர்கள் ). பல்லோர் உளர் - பலர் உள்ளனர். காண்பார் - அறிந்துகொள்வார்கள்; நா - நாவினால்; தக்கவாறு - பொருந்தும்படி; உயர்த்துவாய் - போற்றுவாய்.
நயன் - நல்லபடி; நண்பாகி - கூட்டாளியாகி; காணாமல் - பிறர் அறியாமல்; கூட்டில் புகுநாகம் - பறவைக்கூட்டில் உள் புகுந்த நாகம். போல - ஒக்க;
முட்டை ஓட்டுடைப்பில் உள்ளவை உண்பார் - உடைத்து முட்டையில் உள்ளதை உண்பார், காண் பிடி ஓர் படம் - கண்டுவிட்டால் ஒரு படம் பிடித்து விடுங்கள். உள்ளதைக் காட்டிவிடும் - உண்மையைக் காட்டிவிடும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக