கோப்பன் என்ற சொல் இப்போது பேச்சு மொழியில் வழங்குவதில்லை. அது அயற்சொல் போல் செவிகளை வந்து எட்டினாலும், பழைய தமிழ்நூல்களில் இன்னும் கிட்டுவதே யாகும்.
இந்தச் சொல்லின் பொருள், போக்கிரிப்பையன் என்பதுதான். கண்ணபிரானும் தம் சிறுவயதில் சேட்டைகள் பல செய்தவரென்பர்.
பலரும் செய்யும் சேட்டைகளில் சில கெடுதலானவை. ஆனால் கண்ணன் செய்தனவாகச் சொல்லப்படும் சேட்டைகள் கோபியரிடைப் பின்னர் ஓர் இன்ப அதிர்வினை விளைத்தவை. அறியாப் பருவத்தில் கொஞ்சம் வெண்ணெயை வழித்துத் தின்றது.
கோபத்தை உண்டாக்கினாலும் நல்லவனாகப் போற்றப்பட்டவன். ஆகவே "நல்ல போக்கிரி".
நன்+ த கோப்பன். (பொருளை மேலே கவனித்துக்கொள்ளுங்கள்).
நந்தகோப்பன் > நந்த கோபன் ஆயிற்று.
கோப்பன் > கோபன் இஃது இடைக்குறை.
நந்த இது உண்மையில் நன்றான என்பதன் திரிபு. நன் த > நந்த என்றது பிந்தி
முந்தி என்பன போலும் ஓர் புணர்ச்சி.
இச்சொற்கள் பலவாறு உரைக்கத் தக்கவை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக