ஆசிரியப்பா
அலைபே சியுடன் அலைந்தனை கடல்போல்!
அலைந்தே அகத்தினுள் அடங்கினை உறக்கம்
கலந்தாய் ஆங்கது களைந்தே,
ஒலுங்குதல் இயலாய் நிலங்கெழு மாந்தனே.
கடல் அலை ஓயாமை போல மனிதனும் ஓயாமல் அலைபேசி என்னும் கைப்பேசியுடன் நீங்காது அலைகின்றான். படுக்கைக்குப் போகும்போது அதை அப்பால் வைத்துவிட்டு ஒதுங்கி ( ஒலுங்குதல்) இருக்க, நிலத்தை வெற்றிகொண்ட மனிதனால் இயலவில்லை.
இதை விளக்கும் படம்:
இரண்டு அலைபேசிகள் உள்ளன.
உங்கள் அலைபேசியை நீங்கவேண்டுமென்பதில்லை. அது இணைபிரியாத நண்பனாகிவிட்டது. நீங்கமுடியாது என்பதுதான். செய்தித்தொடர்பு, உறவினர் தொடர்பு முன்மை பெற்றுவிட்டன என்பதுதான்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
உங்கள் ஆய்வுக்கு:
சில உலக மொழிகளில் த் வருவதற்கு மாற்றாகச் சொல்லில் ல் வரும். அத்தகைய மொழிகளில் ல் - த போலி. தமிழில் அப்படி வருமா என்று நீங்கள் கேட்கலாம். ஒலுங்கு > ஒதுங்கு என்பதில் வருகிறது. இந்த மொழிகளிலிருந்து சில சொற்களை எடுத்து ஒப்பாய்வு செய்து ஒலுங்கு> ஒதுங்கு என்பதுபோல எடுத்துக்காட்டுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக