பவனி என்பது ஓர் அழகிய சொல். தமிழில் இச்சொல்லும் வழங்குகிறது. ஊர்கோலம் என்ற சொல்லும் வழங்குகிறது. இது ஊர்வலம் என்றும் வழங்கும். ஊரைக் கோலி வருவது ஊர்கோலம். கோலிவருதல் என்பது இப்போது அவ்வளவாக வழக்கில் இல்லை. பாட்டிமார் காலத்தில் பெரிதும் அறியப்பட்ட சொல் அது. இன்று முதியவர்களாகிவிட்ட சிலர், அவர்கள் பாட்டிகாலத்துச் சொல் என்று இதைக் குறிக்கிறார்கள்.
முதலில் பவனி என்பதை இங்கு அறிந்துகொள்ளுங்கள்:
பவனி ஒரு தாக்கத்தை .....இடுகைத் தலைப்பு
ஊர்வலம் என்பது ஊரை வலமாகச் சுற்றிவருவது என்போர் ஊர்கோலம் என்பதை ஊர்வலம் என்பதன் திரிபு என்றும் கருதுகிறார்கள்.
இச்சொற்கள் பல ஆண்டுகட்கு முன்னரே வழக்குடையன ஆகிவிட்டபடியால், ஆய்வின் மூலமே இதை முடிவுசெய்தல் வேண்டும். இது நிற்க:
பவானி என்பதும் அழகிய சொல்லே.
பவானிக்கும் பவனிக்கும் பரவுதற் கருத்தே ஒரு பொதுமையைத் தருகிறது. அந்தப் பொதுமை .வேறன்று.
பவானி அம்மனுக்கு இன்னொரு பெயர். பாவானி எங்குமுள்ளதாகிய தெய்வத்தின் பெயர்.
பரவலாகச் சுற்றிவருவது பரவு அணி, இதில் ரகரம் இடைக்குறையாகி, பவ அணியாகி, பவ அனியாகி, பவஅனி > பவனி ஆனது.
அணி என்பது அண்மி ( அடுத்தடுத்து) நிற்றல்.
அண்> அணி.
நாம் அன்புகொள்ளும்போது, அடுத்துச்செல்கிறோம்.
அண்<> அன்
அடுத்தலில் உடலால் அடுத்தல், மனத்தால் அடுத்தல் என்று இரண்டும் அடங்கும்.
அன்> அனை> அனைவர் என்று மக்களைக் கூட்டிச் சொல்கையிலும் அனைத்து என்று பொருளைக் கூட்டிச் சொல்வதிலும் இந்தக் கருத்து மறைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்க.
பவ + அன் + இ > பவ ஆன் இ > பவானி.
எங்கும் பரவி இருப்பவளும் அம்மை; நம்மை அடுத்திருப்பவளும் நம் அம்மை.
இதனோடு கடவுள் என்பதை ஒப்பிடுக:
யாவையும் கடந்து நிற்பதும் கடவுள். யாவினும் உள்ளிருப்பதும் கடவுள்.
அன் > அன்பு. அன்> அனி என்றாலும் அடுத்தல் கருத்து வரும்.
ஒரு நூலாகவும் எழுதலாம். இடுகைகள் சுருக்கமாக இருத்தலே நன்று.
இன்னொருகால் இங்குச் சொல்லாமல் விட்டவற்றைச் சற்று விரிப்போம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக