வெள்ளி, 20 மே, 2022

உலகில் அரியது இன்றும் சூரியன் தான். அதனால் அருணன்.

 வரலாற்றில் சூரியன் என்ற வாள்வெளி ஒளியுருண்டை,  ஒரு அரிய பொருள் என்றுதான் இன்றும்கூட நாம் கருதவேண்டும்.  வானநுல் ஏடுகளை வாசித்துவிட்டு,  அண்டமா வெளியில் பல சூரியன்கள்  இருக்கின்றன என்று நாம் முன்னின்று வாதிக்க முனைந்தாலும்.  அவை நம் ஊனக்கண்களால் நாம் கண்டுகொண்டவையல்ல.

பண்டை மனிதற்கு  ( ஒருமை)   கண்டறிந்த ஒளியுருண்டைக்குப் பெயரொன்று அமைக்கத் ததிகிணதோம் தாளம் போட்டுக்கொண்டிருக்கையில்,  தாம் கேள்விப்பட்டுக்கூட இராத பல சூரியன்கள் மனக்கண்முன் தோன்றுதல் எங்ஙனம்?  அவனறிந்தது ஒரு சூரியன் தான்.

தொலைவில் உள்ளது.  அதிலிருந்து ஒளியும் சூடும் நம்மை வந்து எட்டுகின்றன,.  அதைப்பற்றி..........தவிர  மற்றவை தெரியவில்லை.

என்ன அது? அதுதான் உலகைப் படைத்த கடவுளோ?  எங்கோ இருக்கிறது,  வெகுதொலைவில்.

பகல் வேளையில் சூடு கொடுக்கிறது, உணர்கிறோம்.

தேவர்களில் நமக்குச் சூடு கொடுக்கும் தேவன் இவன் தான்.

சூடு இவனால்தான் இயல்கிறது.   இவன் சூடு கொடுத்து இயல்பவன்.  இவன் சூடியன்.   இது திரிந்து சூரியன் ஆயிற்று.  டகரம் ரகரமாகும்.

இத்தேவனைப் போல் இன்னொருவன் இல்லை.  இவனுக்கு பாற்பகுப்பு இல்லையோ.  இருப்பினும் சூடியன் என்றே குறிப்போம்,  

பிறர்:  அவன் தேவன், அவனை வணங்குவோம்.

மூன்று நாட்களாய் இவனை வணங்கிக்கொண்டு இருக்கின்றேன்.  அம்மம்மா. நல்ல உணவு கிடைத்து மகிழ்ச்சியாய் இருக்கிறேனே. கடவுள் என்றால் இவனே கடவுள்.

குளிரையும் போக்கினான் இவன்!

ஆங்கே இருந்துகொண்டே சாப்பாடும் அனுப்புகிறான் இவன். 

இவனைக் காலையில் காலையில் வணங்கவேண்டும்.

[இவ்வாறு சொல்லிக்கொண்டே இருக்கலாம்.]

ஓர் அறிவு வாதி சொல்கிறான்: இது தேவனுமில்லை,  கடவுளும் இல்லை. இது வானத்து ஒளிப் பிழம்புருண்டை.

எதை எப்படிப் பார்த்தாலும் இறுதியில் எல்லாரும் இல்லாமல் ஒழிந்துதான் போகிறார்கள்.

சூரியன் அழியாததுபோல் இருக்கிறதே.......

உலகில் அரியது இது. இதுபோல் இன்னொன்றில்லை. எல்லாம் இவனிலிருந்து வருவதுதான்.

அரியதை உள்ளடக்கிய தேவன் இவன்.

அரு + உள் + நன்.

கடவுளில் உள் இருப்பதுபோல் இதில்  (இச்சொல்லில்) உள் இருக்கின்றது.

(உள்  என்பது ஒரு விகுதி)

அருணன்.

இவனுக்கு இன்னொரு செல்லப்பெயர்.அருள்நன் > அருணன் என்பாருமுண்டு.

இவனுக்கு ஒவ்வொரு மொழியிலும் பெயர்   (உண்டு).  இவன் செல்லப்பிள்ளை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்

சில திருத்தங்கள்:  21052022 2250


கருத்துகள் இல்லை: