ஞாயிறு, 10 மே, 2015

பிரம்மானந்தம்

ஆனந்தம் என்ற  சொல்லை முன் இடுகையொன்றில் ஆய்ந்துள்ளோமென்று  உங்களுக்குத் தெரியும்..  ஆங்கு அறிந்துகொண்டதை ஈண்டு நினைவு கூர்க

இது தமிழ் மூலங்களை உடைய சொல். இந்தியாவெங்கும் வேறு மொழிகளிலும் வழங்கிய சொல். புத்தரின் தலைமாணாக்கருக்கும் பெயராய் அமைந்து சிறப்புற்ற சொல்.  தமிழ் தலைத் திராவிட மொழியாகலின் இந்தியாவெங்கும் வழங்கிய மொழி என்பதும்  பாகதங்கள் பலவினுக்கும் சொற்கள் பல தந்துதவிய மொழி என்பதும் அறிதல் வேண்டும்.

இப்போது பிரம்மானந்தம் என்ற சொல்லை அணுகுவோம். இது உண்மையில் பெருமானந்தம்  அதாவது பெரும் ஆனந்தம் என்பதன் திரிபு ஆகும்   பெரு ஆனந்தம் என்பது தமிழ்ச் சொற்புணர்ச்சி முறைப்படி பேரானந்தம் என்று வரவேண்டும்.  அங்ஙனம் வாராதது அது தமிழின் பயன்பாட்டுக்கென்று அமைக்கப்பட்ட சொற்றிரிபு அன்றென்பது  பெற்றாம்.


இதைப் பிரம்மா+ ஆனந்தம்  என்று பிரித்து பிரம்மனின் ஆனந்தம் - ஆகவே  பெரிதான ஆனந்தம் என்பதுண்டு. பெரு + ஆனந்தம் > பெருமானந்தம் > பிரமானந்தம் என்று வந்துவிடுவதால்,  பிரம்மனின்  ஆனந்தம் ஆகவே பெரிய ஆனந்தம் என்று  சுற்றிவளைத்து வந்து சேரவேண்டியதில்லை. பரமன்+ ஆனந்தம் = பரம + ஆனந்தம் > பரமானந்தம் என்பதுமுண்டு.  பரமன் என்பது பரத்தல் >  எங்கும் பரவி நிற்றல் என்ற கருத்தில் வரும் .  அங்ஙனமாயின், அது தனி மாந்தனின் ஆனந்தம் அல்லது மகிழ்ச்சியைக் குறிக்க ஏற்புடைய சொல்லன்று. 
பரமனின் மகிழ்ச்சி என்று பொருள்பட்டுப் பொருள் வேறுபாடு அடையும். 


Brahma and prophet Abraham of the Jews.

பிரமன் அல்லது பிரம்மன் என்பது ஆப்ரகாம் என்பதன் திரிபாய் யூத இறையுணர்வாளர்  ஆபிரகாம் என்பவரைக் குறிக்கும் என்றாரும் உளர்.  ப்ர > ஆப்ர என்று திரிந்தது என்பர்..  ஆனால் ஒன்று "கடவுள்" மற்றொன்று மனிதரைக் குறிக்கும் என்பதாலும் இவர்களின் வரலாறுகளாகக் கூறப்படுவன  ஒற்றுமை இல்லாதன என்பதாலும் பொருந்துவனவாய்த் தெரிந்திலது.


will edit

கருத்துகள் இல்லை: