ஞாயிறு, 3 மே, 2015

war crimes investigation

சில நாடுகள் சொல்வது:

போர்க்குற்றம் புரிந்தோரே வாருங்கள் வழக்குக்கு;
நேர்மாறாய் நடந்தீரே  தாருங்கள் ஒத்துழைப்பு;
கூர்முற்றும் மழுங்காத தீர்மானப் படிமாலை
நார்மட்டும் தெரியாத நல்லமுறை வழங்கிடுவோம். 

எத்தனையே இலக்கமென்று எம்மிடமோ கணக்குண்டு;
செத்தவர்கள் உறுப்பறைகள் மொத்தமிதில்  பிணக்கில்லை;
சொத்துகளும் அழிந்தனவே குத்துமதிப் பதற்குண்டே!
மத்துகடை தலைப்போலே குடைதலில்லை முறையுண்டு.

நிலைமை  கூறல்:

அணிகூர்ந்த அரசநிலைப் பணிநீங்கிப் படுகைவீழ் 
தனிமாந்தன் இராசபக்சே குனிவுற்றுக் கூண்டேறி
இனிவாழா  ஒறுப்பினையே இளிபெறவே பெற்றாலும்
நனிவாழத் தமிழர்மறு வாழ்வமைதல் உடன் தேவை/

நாடிழந்த காரணத்தால் நலிவடைந்த தமிழர்பலர்;
வீடிழந்த  அளியருக்கு வீடுடனே வேண்டுமன்றோ
கூடிழந்த  பறவைகூடக்   கொல்லும் எமன் தனைநீங்கி
நாடிநின்ற தலத்திலகம் பீடுபெற  அமைத்தியலும்.

நெடுந்துயரை நீணிலத்தில் படுந்தனையும் விடிவுண்டோ?
கெடுந்தனையும் கெடுகவென இருந்தபுவி ,மன்பதையோர்
தொடர்விழிநீர் துடைத்திடவே எண்ணுதலும் நல்லகாலம்
படரிடும்பை முற்றகலப்  பரமனருள் வெல்கநாளும

preview and edit not available

error message
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismisss


நல்ல முறை -  நல்ல நீதி.

கூர் முற்றும் மழுங்காத தீர்மானம் :  இனப் படுகொலைக்கு முழு நீதி கிட்டா விட்டாலும் ஏதோ  சிறிது கேட்பதுபோன்ற தீர்மானம்;   (அறவே கேட்கமாட்டோம்  என்று தள்ளிவிடாமல் ).
எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடாமல் (  உதிர்ந்துபோனால்  நார் மட்டும் மிச்சம்; அப்படி இன்றி நார் தெரியாமல்  சில பூக்களாவது மாலையில் உள்ளன போலும் நீதி  )  இது   " மாலை  நார்மட்டும் தெரியாத நல்லமுறை"  எனப்பட்டது.
இலக்கம் -  இலட்சம்  என்ற எண்ணிக்கை . 
:உறுப்பறைகள்  -  கால் கை இழந்தோர் . 
குத்து மதிப்பு :ஏறத் தாழ என்று சொல்லும்படியான  மதிப்பீடு.
முறையுண்டு  this is a reference to proper judicial procedure
படுகை = பள்ளம் 
குனிவு:   அவமானம்.
கூண்டு:  குற்றவாளிக் கூண்டு.
இனி வாழா  ஒறுப்பு  -  மரண  தண்டனை.
இளி  -  தகுதிக்குக்  கேடு. 
அளியர் -   இரக்கத்துக்கு  உரியோர்.
தலத்திலகம்  -   தலத்தில் வீடு ;   தலம் -  இடம்.
பீடு -  பெருமை.
புவி மன்பதை -  international community.
படர்  இடும்பை  -   விரிவடையும் கெடுபாடும் துயரும்     










கருத்துகள் இல்லை: