வெள்ளி, 11 ஏப்ரல், 2014

பாணரும் பாணினியும்

பழந்தமிழகத்திலும் அதன் கற்று வட்டங்களிலும் சிறப்புத் தொழிலுடையோர் பலர் வாழ்ந்தனர் என்று தெரிகிறது.  பழந்தமிழ்  நூல்களையும் கலைகளையும் காக்கும் தொழிலை மேற்கொண்டு  "காப்பியக் குடியினர்" என்போர் விளங்கினர் !  தொல்காப்பியனார் இக்குடியில் பிறந்து மிகுபுகழ் எய்தினர் என்பர் ஆய்வாளர் சிலர். இங்ஙனமே  வள்ளுவக் குடியினரும் அவர்கள்தம் சிறப்புத் தொழிலை (நூல் இயற்றுதல்,  காலக் கணிப்புகள் செய்து பிறர்க்கு அறிவுறுத்துதல் )  செய்து வந்தனராம்.

இப்படித் திறன்மிக்கத் தொழில்களில் ஈடுபட்டோர் பிற நாடுகளிலும் இருந்தனர்.  யூதர்களில், எழுதுவோர் (scribes),  வேதம் பற்றுநர் ( pharisees ), சாதுசீக்கள் அல்லது நம்பாதார் (saducees)**,  பொதுவூழியர் ( publicans)  என்றெல்லாம் பல குழுவினர்  இருந்தனர்  என்று தெரிகிறது.1  அரபு நாட்டிலும் கத்தீபுகள் என்று குறிக்கப்பட்ட கல்வியாளர்கள் இருந்தனர்.

தமிழ் நாட்டில் பாணர்கள் இருந்தனர். இவர்களின்  வேலை கற்றலும்   பாட்டுகள் புனைந்து பாடுதலும் பிறவுமாம். இவர்கள் திறன் மிக்கோராய் இருந்ததுடன்.அரசர் மந்திரிகள் முதலானோருடன் ஒருங்கு நின்று தம் வேலைகளில் மகிழ்ந்தோராயும் இருந்தனர் என்பது தெளிவு.2

சமஸ்கிருதத்துக்கு முன்னோடியான மொழிக்கு இலக்கணம் இயற்றிய பெருமைக்குரிய பாணினியும் இந்தப் பாணர் வகுப்பைச் சேர்ந்த பெரும்புலவர் என்று தெரிகிறது.

பண் >  பாண் > பாணன்.  

பாண் + இன் + இ =  பாணினி  .  "பாண்" வகுப்பினன்.3

பிற்காலத்தில் இவ்வகுப்பினர் தம் நிலையினின்று  இறங்கிவிட்டனர்

பாணினி   என்ற சொல் இதைத் தெளிவாக்குகிறது.

அத்தியாயம் என்ற சொல்லை இவர் அமைத்ததிலிருந்து அல்லது பயன் படுத்தியதிலிருந்து  இவர் தமிழறிந்தவர் போல் .தெரிகிறது .

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_3362.html

இவர்தம் சொற்றொகுதியை (vocabulary)  நன்கு ஆராய்ந்தால் மேலும் சான்றுகள்  கிடைக்கலாம்.


பாணினி  தம் குடி விளங்குமாறு "பாணினீயம் " இயற்றியது பிற குடியின் அறிஞர் போற்றிய வழியே ஆம். பரதவர்  வழி வந்தவர் தம் குடி மறக்காமல் பாரதம் இயற்றியது காண்க.  பாண்டியர் மீன் கொடி உடையராய் ஆண்டதும், பரவை என்ற சொல் கடலைக் குறித்தலும், பரதவர் என்பது மீனவர் என்று பொருள்படுதலும்,  பரதம் > பாரதம் என்ற சொற்களும், பாரதம் இயற்றியோன் மீனவ வழி வந்தவனாயிருத்தலும் மீனவர்கள் அரசு நிறுவியிருந்ததைத் தெரிவிக்கும்.  மனிதனின் கடலோர நாகரிகம் மீனுடன் தொடர்புடையது. கடல் வண்ணன் விட்ணு மச்சாவதாரம் எடுத்ததும் காண்க. அரசு நிறுவியபின் மீன் உணவை நிறுத்தி அதனை இறைமையுடன் தொடர்புறுத்தினர். இது நாகரிக மேம்பாட்டைக் குறிக்கிறது.  ஆய்ந்துணர்க.

----------------------------------------------------------------------------------------------------

Notes:

1  Described in other terms by  Tamil NT translators.

2  Consult  Tamil Studies   by  M Sreenivasa Ayyangkar on the position of these castemen  or groups in by-gone days.

3 Some western researches thought "pan" must be his father's name.  They thought so because janaka+ i  = janaki, was  Janaka's daughter.  Also, dasaratha+ i = Dasarathi, i., Rama, the son of Dasaratha. Following this. we can say that if he was not a  Panan, then his father was one. Maybe, his mother was not a Panan!! This is not so different an outcome.

**  Saducees  did not believe in resurrection,  ghosts etc. You may post your comments about this group if you have something additional or at variance.

will edit

கருத்துகள் இல்லை: