புதன், 9 ஏப்ரல், 2014

நாடகம்

நாடகம் எனப்படும் சொல்லை ஆய்வோம்.

இச்சொல்லினுள்  நுழையுமுன் சில விதிகளை நாம் மனங்கொள்ள வேண்டும்.

இவற்றைக் கவனியுங்கள்.

படு >  பாடு.
சுடு  > சூடு.

படுதல் சுடுதல்  ஆகிய வினைகளினின்று  அமைந்த பெயர்களே   பாடு   சூடு  முதலியன.   முதனிலை திரிந்த (நீண்ட ) பெயர்களே.இவை

வினைச்சொல்லின் முதலெழுத்து நீண்டு பெயராய் மாறின.

காகிதம் போடு ,  காகிதம் ஒரு பொருள். அதைப் போடலாம்.
சூடு போடு .  சூடு ஒரு காணும்  பொருளன்று.  எனினும் சூடு என்ற சொல் ஒரு பொருள் போலுமே நிற்பது காணலாம்.

இவற்றுள் சில பின்னும் ஒரு விகுதி பெறுதல் உண்டு.  எ-டு   சூடம் .(அம் ).

இப்போது நாடகத்துக்குப் போவோம்.

நடி+ அகம்  =  நாடகம்.

இங்கு ந  என்பது நா  என்று  நீண்டது .  பின் நடி  என்பதன் இறுதி இகரம்  கெட்டது  (மறைந்தது).  அகம் என்ற விகுதி வர,  நாடகம் ஆயிற்று.

பாடம் என்பதும் அப்படியே.   படி என்பதில் இகரம் கெ ட்டது. பகரம் நீண்டது.
 அம்  சேர்ந்தது.

நாடகம் என்பதில் அகம் ஒரு விகுதியாய்க் கொள்வோம்.  அதை இன்னும் பிரித்துக் காட்டுதல் கூடும் எனினும் இப்போதைக்குத் தேவையில்லை என்று எண்ணுகிறேன். 

கருத்துகள் இல்லை: