புதன், 2 ஏப்ரல், 2014

முதலியார் என்ற சொல்லமைபு

முதலியார்  என்ற சொல் எங்ஙனம்  உருவாயிற்று என்று கண்டுபிடிக்க முயன்ற அறிஞருள்    கத்தோலிக்க ஃபிரஞ்சு   இறைக்குரு  ஆபி டூபாவும் ஒருவர்.  முதல் என்ற  சொல்லினின்று இப் பட்டப்பெயர் ஏற்பட்டதென்பது அவர் முடிவு.  அதையே அவர் தம் நூலில் எழுதினார். அதைப் படித்த நம் அறிஞர்களும்  அதையே சொல்லிவந்தனர்.  முதல் போட்டு கடை முதலியன வைத்து வியாபாரம் செய்தவர்கள் என்பது டூபாவின் முடிவு.

அப்போதைய நிலையைக்  கருத்தில் கொண்டு  செய்யப்பட்ட கண்டுபிடிப்பு அதுவாகும் .

ஆனால்  கல்வெட்டுக்களில்  அது படைமுதலி என்றிருந்தது  பின் அறியப்பட்டது.  படையின் முதல்வரிசையில் அவர்கள் சென்றனர் ஆதலின் படை முதலிகள் ஆயினர். நாளடைவில் படை என்ற தலைச்சொல் உதிர்ந்த நிலையில் முதலி என்றும்  முதலியார் என்றும் அமைந்தது.  எனவே   பழந்தமிழர் போர் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சொல் இதுவாம். Thus it was a  name of a military rank. (தலையெழுத்து உதிர்ந்துபோன தமிழ்ச் சொற்கள் பலவாம் )

இந்த பட்டப் பெயர் வேறு மொழியினரிடத்தும்   சென்று புகுந்துள்ளது.

செங்குந்தம் என்பது தடி.  செங்குத்தாகப் பிடித்துச் சென்றதனால் இதைச் தூக்கிச் சென்ற முன்வரிசை அணியினர் செங்குந்தர் ஆனார்கள். அவர்கள் செங்குந்த முதலிகள்  என்றறியப்பட்டனர்.  செங்குந்தம்  -  lance.  Compare today's army or other force rank "Lance Corporal". இப்போது இவர்கள் பெரும்பாலும் நெசவாளர்கள்

notes

அகம்படியர் -  internal palace workers or officials.  இதை டூபா சரியாகச் சொல்லியிருக்கிறார். 
Abbe Dubois  French missionary in India, b. in 1765 at St. Remèze (Ardèche); d. in Paris, 17 Feb., 1848. The Abbé Dubois was a director of the Seminary of the Foreign Missions, a member of the Royal Societies of Great Britain and Paris, and of the Literary Society of Madras.

கருத்துகள் இல்லை: