தாட்சணியம் என்ற பதத்திற்கு நேரான ஒரு சொல் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வழங்குகிறதா என்று தேடிப் பிடிக்கவேண்டும். சொல்லையும் சொல்லின் ஒலியமைப்பையும் நோக்க அது முற்றிலும் இந்தியச் சொல் என்பது புரியும்.
இதில் ஒரே எழுத்துமட்டுமே திரிந்து நிற்கின்றது. க என்ற எழுத்து ச என்று மாறியுள்ளது.
இப்போது தாட்கணியம் என்று பிற்செலவு ( reverse ) மேற்கொள்வோம்.
இதைப் பிரித்தால் தாள் + கு + அணி + அம் என்றாகும்.
அம்மையின் அல்லது தேவியின் தாள்களுக்கு ( இணையடிகட்கு) அணியாக அழகாக விளங்குவது எது ? அது இரக்கமே ஆகும். எந்தக் காலணியை அவளுக்குப் பூட்டினும், அவ்வணி பற்றனுக்கு (இறைப்பற்றாளனுக்கு அல்லது பகதனுக்கு ) வழங்கப்படும் இரக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அருளையே குறிப்பதாகும்.
இங்ஙனம், தாட்கணியம் > தாட்சணியம் என இச்சொல்லுக்கு தயை செய்தல் என்ற பொருள் எற்பட்டது.
ககரம் சகரம் ஒன்றுக்கொன்று மாறாக நிற்கவல்லவை. பல உலக மொழிகளில் க > ச திரிபு பெருவரவு ஆகும்
Notes:
அணியம் - may also be interpreted as "readiness" - i.e., readiness to come to help. .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக