ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

வருத்தகம் II

இத்தகைய (வரு-  வர  -  வர்  )    என்ற முதலசைகளின் மாற்றமும் மிகவும் தேவையானதே   ஆகும்.   காரணம்  "வரத்து > வரத்தகம்" என்ற நிலையில்
அஃது  பொருள் ஊருக்குள் வருதலையே  குறிக்கும் இயல்பு உடையதாய்த் தோன்றுவதே

அதை .  "வர் "   என்று மாற்றினால்  பொருள் உள்வரவும் வெளிச்செல்கையும்  
ஆகிய இருவழி நிகழ்வுகளையும் குறித்ததாக அமையக்கூடும்.  சொல்லைப் பயன்படுத்துவோர் இச்சொல்லின் பொருள்   உள்வரு  பண்டங்களுக்கே உரியது போன்ற உணர்வினை   எளிதில் மறந்து மனத்  தடை யாதும் இன்றிப் பயன்படுத்தும் வழி கோலப்படும்
.
மேலும்   வரு> வர்  என்னும் திரிபு பேச்சில் இல்லாததன்று   "வர்ரியா ",   "வர்ரான்"  ,   "வர்ராள் "  "வர்ராங்க"   என்று மடை  திறந்தன்ன திரிபுகள் உள்ளனவே.

வர்த்தகம் என்பது ஓர் அழகிய தமிழ்ச்சொல். ஆய்ந்துணர அது தெளிவாம். 

கருத்துகள் இல்லை: