ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

பாக்கியம். how did that come about?

பாக்கு என்ற சொல்,  "பகுக்கப்" பட்டதனால் எற்பட்ட சொல்.

முதனிலை (சொல்லின் முதலெழுத்து நீண்டு )  பகு என்ற வினைச்சொல்  பெயராயிற்று.

இதற்கு கமுகு என்பதும் .பெயராம்.  பகுக்கப் பட்ட கொட்டையே பாக்கு ஆதலின், பாக்கு மரம் என்று சொல்வது  சொற்பிறப்பு  நோக்கில்  பிழையாய்த்  தோன்றினும் வழக்கில் உள்ளபடியினால், யாம் யாதும் கூறாது விடுகின்றோம்.

திருமணப் "பேச்சுவார்த்தைகள் " வெற்றியுடன் முற்றுப்பெற்றவுடன் பாக்கு மாற்றிக் கொள்ளும் வழக்கம்  உள்ளது. இதே வழக்கம் மலாய் மக்களிடமும் உண்டு.

திருமணம் நடைபெறப்  பெரியோர் ஒப்புதல் தந்தபின் வாழ்க்கையில் ஈடுபடத்   தயாராய் உள்ள இருவருக்கும் அதைவிடப் பாக்கியமானது வேறேது? அதுவே பாக்கியமாம்.

பாக்கு மாற்றிக் கொள்ளும் இனிய நிகழ்விலிருந்து பாக்கியம் என்ற சொல் தோன்றியது எத்துணைப் பொருத்தமானது!

பகு > பாக்கு > பாக்கியம்.

உண்மையில் divide என்று பொருள் படும் பகு என்னும் சொல்லினின்று பாக்கியம் தோன்றியது சற்றும்  பொருத்தமற்றது  எனலாம் --  இந்தப் பாக்கு மாற்றும் முன்னோடிச் சடங்கிலிருந்து  அதையே அடிப்படையாய்க் கொண்டு
அது தோன்றவில்லை ஆயின் !

சொற்களின் பண்டக சாலையான சமஸ்கிருதமும்  இதை மேற்கொண்டு சொல்லைப் பதிந்து வைத்துக்கொண்டுள்ளது.

பண்ட  நிறைவகத்தின் காவலன்,  அது அவன் இடத்தினின்றும்  வந்ததென்பான் ---  உண்மைதான். அது  நிறைவகத்துக்குள் சென்றமர்ந்து விட்டதல்லவா ! சொல்லிக் கொண்டுதா  னிருப்பான்.

ஆனால்  இது ஒரு" சுப"   (நல)  நிகழ்வின் காரணமாய்த் தோன்றிய சொல்!

மலாய்  -   bahagia  (see previous post)

கருத்துகள் இல்லை: