முருகன் கடம்ப மலரில் அமர்ந்தவன் என்னும் பொருளில் பரிபாடலிலும் ("கடம்பமர் செல்வன்") பொருநராற்றுப் படையிலும் ("கடம்பமர் நெடுவேள்") என்று வருவதனால்., அவன் "மலர்மிசை ஏகினான்" என்று திருக்குறளில் குறிக்கப்படுகின்றான் என்பது ஒப்பு நோக்கின் தெளிவாகிறது.

அமர்ந்தான் எனில் அது மேலிருந்தான் என்று பொருள்படுவதாம். இதற்குச் சூடினான் என்று பொருள் கூறுவது பொருத்தமாயின், "மிசை ஏகினான்" என்ற திருக்குறள் தொடருக்கும் "சூடினான்" என்றெ பொருளுரைத்தலில் இழுக்கொன்றுமில்லை.