மெல்லின எழுத்து வல்லினமாகத் திரிபு அடையும் இடனும் உண்டு. அப்போது அது வலித்தல் எனப்படும்.

இங்ஙனமே வல்லின எழுத்து மெல்லினமாகத் திரியுங்கால் அது மெலித்தல் எனப்படும்.

" நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே." 


இங்கு நந்தி என்றது சிவபெருமானை. நந்திமகன் - சிவன்மகன்.

புந்தி <> புத்தி.


குன்றும் மலையும் பலபின் ஒழிய
.................................................. ......................
"காணாது ஈத்த இப்போருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
தினைஅனைத்து ஆயினும் ....................
............................... நல்கினர் விடினே. "

-- பெருஞ்சித்திரனார், (புறநானூறு)

புலவரை நேரில் காணாமல் அலுவலாளன் மூலமாகப் பரிசில் தந்த அதிகமானுக்கு, அவ்வலுவலாளன் சென்று அறிவுறுத்துமாறு அவர் பாடிய பாடலின் பகுதி.

ஈந்த <> ஈத்த. 

இன்னும் ஒன்று:

"ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்் தாமுடைமை
வைத்திழக்கும் வன்கண் ணவர்"
 குறள் 228

ஈத்து <> ஈந்து.

இங்ஙனம் வரும் பிற திரிபுகளையும் கண்டுகொள்க.

சிந்தி, சிந்தை, சிந்தனை, சித்து. சித்தர். சித்தம் முதலிய சொற்களில் ந் > <த் மாற்றங்களை அறிந்தின்புற இவ்வறிவு உதவும்.