ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சீனி

சீனி என்ற தமிழ்ச்சொல் தமிழ் நாட்டில்  மெதுவாக மறைந்துவருகிறது போலும்.  தமிழகத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் sugar என்கிறார்கள்.  இனிப்பு  நோயாளிகளும் sugar ஏறி விட்டதென்று சொல்வர்.

சீனி என்ற சொல் எப்படி வந்தது  அறிந்தால்,  ஒருவேளை அச்சொல்லை மிக  விரும்பிப்   பயன்படுத்துவரோ என்னவோ`!

எதற்கும் நாம் அதை அறிந்துகொள்வோம்.

கற்கண்டு சற்று பெரிய கட்டிகளாக வருகின்றது.  சீனி  தூள் செய்யப்பட்ட கற்கண்டு தான். ஆகவே அது சிறு துகள்களாக இருப்பது.

இதுவும் சில்  அடிச்சொல்லிலிருந்து வருகிறது என்பர். Pl see chinthu and chillaRai , previous posts.

சில் >  சின் >  சீன் > சீனி .

சின்னவன் சின்னப்பன் முதலிய சொற்களில் சில் > சின் என்று திரிகிறது.

சின்  > சீனி   {முதனிலை நீண்டது.).

இதுபோன்று முதலெழுத்து நீண்ட சொற்களைப் பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள்.

இங்ஙனம்  அன்றி ,  தமிழறிஞர் க. ப  மகிழ்நன் (    K.P. Santhosh )  (1948)    இது  சீனாவிலிருந்து வந்தமையால்  சீனி என்று பெயர் பெற்றது என்கிறார். இந்தப் பிற்கால ஆய்வினை அவர் அறிந்திருக்கவில்லை.

இரண்டு வகையிலும் பொருத்தமாய் அமைந்தது இச்சொல்.  சில வகைக் காய்கறிகள், சிறிய உருவில் இருப்பதால் சீனி என்ற அடைமொழி பெற்று குறிக்கப்பட்டன.  ஆனால், சீன வெடி, சீனாக் கற்கண்டு, சீனத்துக் கிளி
என்ற சுட்டுகைகளையும் கவனிக்கவேண்டும்.

Neither is wrong.   

கருத்துகள் இல்லை: