யப்பானியர் (ஜப்பானியர்) தென்கிழகாசிய நாடுகளைக் கைப்பற்றி யாண்ட காலங்களில் தடுப்புக் கைதிகளைத் துன்புறுத்தும் நிலையங்கள் பல செயல்பட்டன வென்பர். பிடித்துக் கொணர்ந்து வருத்தும் இவ்விடங்களை "வருத்தகங்கள்" எனின் எத்துணைப் பொருத்தம் என்று சொல்லவும் வேண்டுமோ? (torture chambers)
ஏற்றுமதி - இறக்குமதி சரக்குகள் மாற்று வணிகத்தில் பயன் பெறும் "வர்த்தகம் " என்னும் சொல்லே நாம் ஆயப் புகும் சொல்லாம்.
போக்குவரத்து என்னும் சொல்லை நோக்குங்கள். இதில் "வரு "(வருதல்) என்பதில் உள்ள "ரு " சொல்லாக்கத்தில் "ர " என்று திரிந்துள்ளது. ஆக, ரகர ஒற்றின் மேலேறிய உகரம் கெட்டு அகரம் வந்துற்றது. எனவே பொருள்களை வருவித்தல் என்னும் பொருளில் "பொருள் வரத்து" எனப்பட்டது. இது பேச்சு வழக்கில் சொல்லப்படுவது ஆகும்.
இந்த வரத்திலிருந்து அமைந்ததே வரத்தகம். அதுபின் "வர்த்தகம் " என்று அழகு படுத்தப்பட்டது. ( word polishing). இதன்மூலம் அது வரு என்னும் மூலத்தை உடையது என்பதை மறந்து தடையின்றிப் பயன்படுத்தவும் ஒரு வாய்ப்பு நல்கப்பட்டது.
குறிப்பு:
வரம்+ அத்து +இல்+ இருந்து = வரத்திலிருந்து. (அத்து - சாரியை)
வரத்து + இல் + இருந்து.= வரத்திலிருந்து . (வரத்து - சொற் பகுதி , இல் - உருபு .இருந்து - சொல்லுருபு.)
வருத்து = துன்புறுத்து என்பது.. .
வருத்து + அகம் = வருத்தகம். எனல் பொருத்தமே. ஆனாலும் இவற்றை யாரும் இப்படிக் குறித்ததாக யான் அறியேன்.
ஆனால் நான் கூற விழைந்தது இவை பற்றி அல்ல.
ஏற்றுமதி - இறக்குமதி சரக்குகள் மாற்று வணிகத்தில் பயன் பெறும் "வர்த்தகம் " என்னும் சொல்லே நாம் ஆயப் புகும் சொல்லாம்.
போக்குவரத்து என்னும் சொல்லை நோக்குங்கள். இதில் "வரு "(வருதல்) என்பதில் உள்ள "ரு " சொல்லாக்கத்தில் "ர " என்று திரிந்துள்ளது. ஆக, ரகர ஒற்றின் மேலேறிய உகரம் கெட்டு அகரம் வந்துற்றது. எனவே பொருள்களை வருவித்தல் என்னும் பொருளில் "பொருள் வரத்து" எனப்பட்டது. இது பேச்சு வழக்கில் சொல்லப்படுவது ஆகும்.
இந்த வரத்திலிருந்து அமைந்ததே வரத்தகம். அதுபின் "வர்த்தகம் " என்று அழகு படுத்தப்பட்டது. ( word polishing). இதன்மூலம் அது வரு என்னும் மூலத்தை உடையது என்பதை மறந்து தடையின்றிப் பயன்படுத்தவும் ஒரு வாய்ப்பு நல்கப்பட்டது.
குறிப்பு:
வரம்+ அத்து +இல்+ இருந்து = வரத்திலிருந்து. (அத்து - சாரியை)
வரத்து + இல் + இருந்து.= வரத்திலிருந்து . (வரத்து - சொற் பகுதி , இல் - உருபு .இருந்து - சொல்லுருபு.)
வருத்து = துன்புறுத்து என்பது.. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக