வெள்ளி, 25 ஏப்ரல், 2014

வைபோகம்

வைபோகம் என்ற சொல்லை மிக்க அழகுடன் புனைந்துள்ளனர். கரு நாடக இசைப்பாடலில்  அதைக் கேட்குங்கால்  தம் சொந்த ஆனின் (பசுவின் ) அழகு  கண்டு  மகிழ்வுற்ற இன்பம் (ஆன் +அம் +தம்   > தம்  ஆன்  அம் )  எமக்கு விளைகின்றது!  அதுதான்  ஆனந்தம் !

:ஞான குரு  பரன்
 தீனர்க் கருள் குகன்,
வானவரும் தொழும்
ஆனந்த வைபோகன்!

என்று பாடுவார்   எம்.எல்  வசந்த குமாரி அம்மா.

முதலில் வைபோகம் என்பது யாது , உசாவி அறிவோம்.  இதை ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமாயின் grandeur,   magnificence என்றெல்லாம் குறிக்கலாம். மகிழ்வும் கவர்ச்சியும் மனத்தால் ஒரு பிணைப்பும் ஏற்படுத்தும் ஓர்  உயர்  நிகழ்வு எனலாமா?

இதை ஏன்  தேர்ந்தெடுத்தோம் ?

அவை  என்பதன்   "வை"  என்னும் சொல்லையும்  "வையகம், வையம் " என்பவற்றின் "வை"  என்னும் பயன்பாட்டையும் .  வைகுதல் என்னும் சொலாக்கக்த்தையும் ஆய்ந்துண ர்ந்த பின்பு  இவ் "வைபோகத்தில்" ஈடுபடுதல் மிக்கப் பொருத்தமுடைத்தாய்  இருக்கும்.  அதனால்தான்.

வை எனின் நுகர்வோன்முன் சிறப்பாக இடப்பட்டது.(வைக்கப்பட்டது )என்பது.  bestowed,

போகம் என்னும் பதம், ஓர் இடக்கர் அடக்கல் சொல். "இவள் அவனிடம் போய்விட்டாள்"  என்று அடக்கிச் சொல்வார்கள். இந்தப் "போவது" என்பதிலிருந்து புனையப் பட்டதே "போகம்" என்பது.  ஆ>  ஆகு,  போ> போகு> போகு+அம் = போகம் என்றாகும்.  இதுவும், வேறு பல போலவே,   பேச்சு வழக்கிலிருந்து திரிக்கப்பட்ட  (புனையப்பட்ட) சொல்.

உங்கள் ஆய்விற்கு சில சமஸ்கிருதச் சொற்கள் :

vinirbhoga m. Name. of a cosmic period ;    vinirbhoga m. (probably . from  bhuj -  Name of a partic. cosmic period. visambhoga male {bhuj} separation   vRthAbhoga

போகம்  என்பது  தமிழ் மூலத்தையுடைய  ---  ஆனால்   இப்போது அயற்சொல்!  எனப் படுவது.    இரண்டு  இலக்கத்துக்குக்  குறைவான  சங்கதச்  சொற்களில்    1/3  விழுக்காடு திராவிடச் சொற்கள் என்பது டாக்டர்  லகோவரியின்  முடிவு. சங்கத்தின் ஒலி அமைப்பு  திராவிட அடிப்படையிலானது   என்பது சட்டர்ஜி அவர்களின்  ஆய்வு.  நான்  இதுவரை  கூறிய  மொத்தம் ,   சிலவே. Less  than a couple of hundreds.

" வை" தமிழே.

வைப்புத் தொகை என்பதென்ன? உங்கள் ஆய்வுக்கு.

edit reserved.



.

கருத்துகள் இல்லை: