அரும் பிழைகள்


போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின்,
தேற்றுதல் யார்க்கும் அரிது.

693.

போற்றின் = காத்துக்கொள்ள வேண்டுமென்றால்;

அரியவை = அரும் பிழைகள் (நேராவண்ணம்);

போற்றல்= காத்துக்கொள்ள வேண்டும்;

கடுத்தபின் = அத்தகைய பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்துவிடுமானாலும்;

தேற்றுதல் = அப்புறம் போய் அதைத் தெளிய வைப்பது;

யார்க்கும் = எவருக்கும்;

அரிது= கடினமாகப் போய்விடும்

என்றவாறு.


அரிது என்று ஒருமையில் முடிந்ததனால், "பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்தாலும்" என்று உரைக்கப்பட்டது.


நீர் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கிறீர். உமக்குக் கீழிருப்பவர் சில பரிந்துரைகளைச் செய்கிறார். அதை நன்கு ஆராய்ந்து, " இதனால் தொல்லைகள் ஏதும் விளையுமா?" என்று நன்கு சிந்தித்து, பிறகு அப்பரிந்துரையை ஏற்றுச் செயல் படுவதா, அல்லது தள்ளுபடி செய்துவிடுவதா என்று முடிவு செய்ய வேண்டும்.
 @461#
அப்படி ஆய்ந்து ஓய்ந்து பாராமல், பிழைபடும் ஒரு காரியத்தைச் சிந்திக்காமல் செய்துவிட்டு, பிறகு அதைச் சரிப்படுத்தி விடலாம் என்றால், அது எளிதன்று. அது முயற்கொம்பாகிவிடும்.

ஸ்பெக்றம் விவகாரம் இதற்கோர் எடுத்துக்காட்டு.

Here Naayanaar is not concerned with common or routine faults. Ariyavai = those faults which may lead to dire consequences....
Even one such fault will be enough to destroy you!!