வியாழன், 24 ஏப்ரல், 2014

அவை

அவை என்ற சொல் உருப்பெற்ற வழியை ஆராய்வோம்.

வை என்ற ஓர் எழுத்துச் சொல்  பல பொருட்களை உடையது. அவற்றுள் ஒன்று, ஓர் இடத்தில் ஒன்றை இடுதல்  என்பதாகும்.  இடப்படுவது, ஒரு  பொருளாகவும் இருக்கலாம். மக்கள் கூடும் ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கலாம்.

"திருமணத்தை எங்கே  வைத்திருக்கிறார்கள்?"

"மாநாட்டை எங்கே  வைத்திருக்கிறார்கள்?

நிகழ்ச்சி வைத்த  இடம்  "வை"  ஆகும். முதனிலைத்   தொழிற்பெயர்.

அ  -  சுட்டுச் சொல். ஆகும்.

குகையிலோ   அரண்மனையிலோ  நிற்பவன்  முதன்முதலில்  சுட்டிச் சொல்லியிருப்பான்.  நாளேற நாளேற  கைகால்களை ஆட்டிச்  சுட்டிக்கொண்டிருக்க மாட்டான். வெறுமனே  "அவை"  என்றிருப்பான்.

அவர் இவர்  என்பதிலெல்லாம்    சுட்டு உள்ளது.   கைகால்களை ஆட்டிச் சுட்டுவதில்லை.

சுட்டிப்பேசுவது அவமரியாதை  என்னும் கலாச்சாரங்களும் உண்டு.  அஃது தவிர்க்கப்படும்.

நாளடைவில்  சுட்டு பொருளிழக்கவேண்டும்.     இழந்தது.

பின்  மதிதகு பேர்கள் கூடுவதற்கு  வைக்கப்பட்ட இடம் (appointed place for assembly) அவை எனப்பட்டது.  இடப் பெயர் பின் அங்கு கூடும் புலவரையும்  (அல்லது பிற பெரியோரையும் குறிக்கும் (அப்படிக் குறித்தலை ஆகுபெயர் என்பர் நம் தமிழிலக்கணத்திலே .)

கருத்துகள் இல்லை: