மூடல் முடக்கத்தில் மாடல் பிற அணிகள் (பிராணிகள்)
மாடல் விலங்கு என்றால் மாடு அல் விலங்கு - மாடு அல்லாத
மற்ற சிறு விலங்குகளை வீட்டுக்குள் வைத்துக்கொஞ்சலாம்.
மாடல்விலங்கு: தமிழில்.
ஆங்கிலத்தில் மாடல் என்பது வேறு. ஆங்கிலச்சொல் என்று
நினைத்தீரோ அன்பர்களே!
உங்களுக்குப் புதுக்கவிதை:
கோவிட் காலத்திலே
கூட்டுக்குள் குருவிபோல் இருந்துவிட்டாலும்
குக்கல் சிறிதொன்று பக்கம் இருந்துவிட்டால்
தக்கசிறு விளையாட்டுகளை அதனுடன் விளையாடிவிட்டு
மகிழ்ச்சியுடன், அக நெகிழ்ச்சியுடன், முக மலர்ச்சியுடன்
கிடந்து உறங்கி மறுநாள் வேலைக்குப் போக
வாய்ப்பாக அமைந்துவிடும்!
வீட்டிலிருந்து வேலை செய்வதாயினும்
கூட்டிலடைபட்ட கொடுமைச் சூழல்
கொழுந்துவிட்டெரியும் தீபோல நெஞ்சகத்து ---
எழுந்திட இடமளிக்காது.
நாயும் நயமே! பூனை இருந்தாலும்
இல்லை எலிப்பயமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக