சிங்கப்பூரில் இப்போது நாய்க்குட்டிகள் நல்லபடி விற்பனையில் வேகமெடுத்துள்ளன. பலரும் வெளியில் செல்லமுடியாமல் நாய்வளர்ப்பின் பக்கம் திரும்பியுள்ளனர். ரூபனும் அம்மா ரதியும் கடைக்குச் சென்ற பொழுது நாலைந்து நாய்க்குட்டிகளை வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர்.
நாய்க்குட்டி வீட்டுக்கு வந்து சேர்ந்த பொழுது அடுத்த வீட்டுக் காரர்களும் வந்து பார்த்துத் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதுடன் நன் கு சிரித்துப் பேசவும் தொடங்கிவிட்டனராம். என்ன ஆனந்தம் பாருங்கள். நாய் வந்ததும் அண்டை அயலார் நட்பும் வளர ஆரம்பித்துவிட்டதே!
இந்தக் குட்டி வீட்டுக்குள் சுற்றிச் சுற்றி ஓடிவருகிறது என்கிறார் ரூபன். சிறியதாகையால் ஓரிடத்தில் இருக்க அதனால் முடியவில்லை. ஆனந்தமே ஆனந்தம்.
அழகான நாய்க்குட்டி --- வீட்டுக்குள் ஓடிப்
பழகாமல் இருப்பேனோ என்று
பாய்ந்து மகிழ்வது ( ஆனந்தமே ஆனந்தம் ).
கழுத்தில் வாருடன்
குதித்து ஓடுவது ( ஆனந்தமே ஆனந்தம் ).
பாட்டேகூட வந்துவிட்டது எனக்கு.
இந்த நாய்க்குட்டி என் வீட்டுக்கும் இந்த வாரம் வருமென்று தெரிகிறது.
அது "விருந்தினர்" ஆகையால் என்ன சாப்பிடும் என்று பார்த்து அதுக்கு
ஒரு சிறு விருந்து கொடுக்கவேண்டும். ரூபன் கொண்டுவருகிறார்.
கோவிட்டில் அடங்கிக் கிடப்பதை மறந்து
குட்டி நாய் ஓடுவதில் மகிழ்ந்த ( ஆனந்தமே ஆனந்தம்)
என்று அப்போது பாடப்போகிறேன்.
நேயர்களுக்கு வணக்கம். சிவமாலை.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக