ஆத்திகம்* என்ற சொல்லுக்குப் பல்வேறு வரையறவுகளை( definition) க் கூறி " ~~* என்றால் என்ன?" என்று விளக்கப் பலர் முற்பட்டுள்ளனர். ஒவ்வொரு வரையறவும் எந்தக் கோணத்திலிருந்து யாருக்காக யாரால் கூறப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டே, அது சொல்லமைப்பில் பொருந்துகிறதா என்று முடிவு செய்யவேண்டும். மதுரையிலிருந்து மானா மதுரைக்குப் பல வண்டிகள் போகின்றன. எனினும் நீங்கள் அங்கு போகவேண்டின், அவ்வண்டிகளுள் ஒன்றுதான் உங்களுக்கு அமையும். எல்லா வண்டிகளும் உங்களுக்குப் பொருந்தாமை போலவேதான். ஆனால் எந்த வண்டியும் பிசகுபடுவதில்லை. எல்லாம் நல்ல வண்டிகள் தாமே! அதுபோலவே நாம் எங்காவது எச்சொல்லுக்கும் வரையறவு முன்வைத்திருந்தால், அது பெரும்பாலும் சொல்லமைப்பு என்பதைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டது என்பது நேயர்கள் நன்கு அறிந்ததே ஆகும். சிவஞானபோத உரையில் கூறியிருந்தாலலும் அது இங்கு இதற்கு விதிவிலக்காகலாம்.
இவற்றையும் வாசித்தறிந்து கொள்ளுங்கள்:
ஆத்திகம் https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_24.html
ஆஸ்திகம் https://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_28.html
இனி இன்னொரு வகையிலும் இது விரித்துரைக்கப்படலாம்.
அகத்து ( அகம் + து ) என்பது அகத்து என்று வந்து பின் ஆத்து என்று திரியும். எடுத்துக்காட்டு: அகத்துக்காரி > ஆத்துக்காரி. அகத்திலே > ஆத்திலே. (வீட்டிலே).
இங்கு + அம் என்பது, இகு+ அம் > இகம் என்று குறுகும். இதன் பொருள்: இங்குள்ளது, இவ்வுலகம். இது வேறு வகைகளில் பொருளுரைக்கப் படுவதுமுண்டு. அதனை ஈண்டு கவனித்தல் வேண்டியதில்லை. பழைய இடுகைகளில் அவற்றைக் கண்டுகொள்க.
ஆத்திகம் எனின், அகத்து இறைப்பற்று எண்ணங்களையும் நிகழ்வுகளையும் எவ்வாறு இங்கு முறைப்படுத்தி அமைத்துக்கொள்வது என்பதைப் பற்றிய நெறிமுறைகள் என்றும் கூறி விளக்கலாம். அவ்வாறு விளக்கினும் அழகாகவே வருகின்றது.
அகத்து > ஆத்து.
இங்கு அம் > இகு அம் > இகம்.
எனவே, ஆத்து இகம் > ஆத்திகம்
இது ஒரு பல்பிறப்பிச் சொல்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
சில விளக்கங்கள் சிற்றளவில் இணைக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக