இவர்கள் குடியிருக்கும் வீடு, ஓர் ஆற்றோரம் இருக்கிறது. ஆனால் கொடிக்கால் எதுவும் இல்லை. அருகில் இருப்பவை வானத்தை முட்டும் மாளிகைகள்.. அங்கு என்ன நடந்தது என்ற விபரம் கீழே.
இது சின்ன நாய்க்குட்டி என்று நினைத்துவிடவேண்டாம். பெரிய ஒரு பாதுகாப்பை இது வழங்கிக்கொண்டிருக்கிறது. எசமான் தாளிகை படிக்கிறார். அருகிலே அமர்ந்துகொண்டு கண்காணித்துக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் கூட இத்தகைய இணையற்ற பாதுகாப்பை யாரும் வழங்கிடவில்லையே! நெருங்கத்தான் முடியுமா யாராலும்?
இரவெல்லாம் நல்லபடி கண்காணித்துப் பாதுகாப்பு வழங்கும் இத்தகைய காவலர்களை, மிகப்பொருத்தமாகவே மேடை ஏற்றி, பூங்கொத்துகள் புடைசூழ தங்கள் நன்றியைத் தெரிவித்திருக்கிறார்கள், திருமதி ரோஷினியும் அவர்தம் அன்புக்கணவரும். நல்ல சாப்பாடும் இருந்தது. தங்கள் வேலைக்குத் தக்க சன்மானம் கிடைத்த மகிழ்வில் அவை நன்றியுணர்வுடன் அமர்ந்திருக்கின்றன. காவலர்கள் வாழ்க! வாழ்க!
எப்படி இவர்கள் மேடை? காவல்மாமணிகள் என்ற பட்டம் வழங்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக