இரணியன் என்பது ஒரு பெயர். இப்பெயரை ஆராய்ந்தால், அதை " இரு + அணியன்" என்று பிரித்துக் காணலாம்.
இரு - பெரிய.
அணி - அழகு.
அன் - ஆண்பால் விகுதி.
ஆகவே இவன் பெரிய அழகன் என்பது பொருளாகிறது.
இன்னொரு வகையில் பார்ப்போம்.
இரு - பெரிய.
அண் - அருகில் இருப்பவன்.
இ - இடைநிலை.
அன் - ஆண்பால் விகுதி.
ஆகவே, இவ்வாறு நோக்கினால், அருகிலிருக்கும் பெரியவன், வலிமை வாய்ந்தவன் என்று பொருளாம்.
இன்னொரு வகையில்:
இர் - இருள். கரிய நிறத்தோன்.
அண் - அருகில் இருத்தல்.
இ - இடைநிலை.
அன் - விகுதி: ஆண்பால்.
கரிய நிறமாய் அருகில் இருப்பவன்.
இரு என்பதை இரண்டு என்று பொருள்கொண்டு, இருவரின் வலிமை பொருந்தியவன் என்றும் சொல்லலாம்.
அணியன் என்ற சொல்லின்முன் இரு என்பது ஈர் என்று திரியும் என்று கூறினாலும், பின் அது இர் இரு என்றே குறுகலும் உடைத்தாதலின், இந்த வாதத்தில் பயனில்லை.
இச்சொல் தமிழ் மூலமுடையதாயினும் பிற வழிகளிலும் பொருள்கூற இயல்வது ஆகலாம்.
அறிக மகிழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக