சொல்லக்கூடிய, அல்லது விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையினதாயும் தொகையினதாயும் இருந்தால் அது சொல்+பு + அம் > சொற்பம். சொற்பம் என்ற சொல்லின் பொருள்: சொல்லக்கூடிய அளவினது. பசுபிக் மாகடலில் உங்கள் வீட்டுக் குவளையால் எத்தனை குவளை தண்ணீர் இருக்கும்? இது சொல்லி முடிக்க முடியாது. அந்த அறிவும் நமக்கில்லை. ஆகவே அது சொற்பமன்று. சொல்லக்கூடியதன்று.
ஒரு சொல்லுக்கு விளக்கம் சொல்லமைப்புப் புரிந்துணர்வுடன் சொல்லப்படுமானால் சொல்லின் பொருளும் தெரிகிறது; அதன் உள்ளுறை சிறு துண்டுகளும் தெரிகின்றன. ஒரு சிறு சொல்லுக்குள் ஒரு காய்வொளி மிளிர்கின்றது. மனமும் அறிந்தமைவு கொள்கின்றது.
கணித்தலில் முக்கிய உறுப்பு "இரண்டும் ஒன்றாகிய" கண்களேதாம். ஆகவே தமிழில் கணக்கு என்பதும் கணித்தல் என்பதும் கண் என்ற சொல்லினடிப்படையில் தோன்றியனவாகும். கண் என்பதனோடு இகரமாகிய வினையாக்க விகுதி இணைந்து சொல் ஆனது.
கண் > கணி> கணி-த்தல். கணி+ இது + அம் > கணிதம். இது என்பதில் இ கெட்டது. து என்பதில் த் எஞ்ச, அம் ஏறிச் சொல் முற்றியது. கெட்டவை அல்லது விடுபாடு கண்டவை, சொல்லாக்கத்துக்குத் தேவையற்றவை.
கண் + அ + கு = கணக்கு, இங்கு, அகர இடைநிலை வந்தது. ககர ஒற்று சந்தியில் தோன்றியது.
முன் பழைய இடுகைகளிலும் சில இதனைச் தொட்டுச் சென்றுள்ளன.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
Edited 30092021 0406
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக