ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிறாள் ஔவைப்பாட்டி. அவ்வாறு செய்யாமல் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதும் காலையில் சென்று மதுவருந்துவதும் வெறுக்கத்தக்கது ஆகும். இவ்வாறு செய்வோர் குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு குற்றவழக்குகளிலும் மாட்டிக்கொள்கின்றனர். பண்டை நாட்களில் இறைப்பற்று நிகழ்வுகளில் மக்களை அரசர்கள் ஊக்குவிக்கக் காரணமே, ஒரு மனிதனின் வாழ்வில் எப்போதும் செயல்நேர்மை கடைப்பிடிக்கும் வழிகள் போற்றப்படுதல் வேண்டும் என்பதுதான். துயர்களுக்கு அயர்வு கொடுக்கவேண்டுமெனில் இறைப்பற்று போற்றுவது இன்றியமையாததே ஆகும்.
ஐயப்ப பற்றர்கள் விருந்தோம்பலிலும் சிறந்து விளங்குகின்றனர்.
இந்தக் காணொளி எங்கு எடுக்கப்பட்டது என்றோ எப்போது என்றோ தெரியவில்லை. ஐயப்ப பற்றர்கள் செய்த ஒரு பூசையின்போது எடுக்கப்பட்டது என்பது புரிகிறது. உங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டம் செய்யுங்கள். இதை எடுத்தவர் குறுஞ்செய்தி அனுப்பி இதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இறைப்பற்றினைப் பகிர்ந்துகொள்ளுவோம்.
அனுப்பிவைத்தவர்: திருமதி லீலா சிவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக