இன்னிசை வெண்பா
பிற்புனைவுக் கூட்டணி ஆனாலும் பேதமற்று
நெற்பிளந்து நேர்ந்தநொய் நேர இணைந்தனரே
வற்புடன் சேர்ந்தாலும் வம்புபிற கொள்ளாமல்
அற்புத்தளை வாய்ந்தால் அது.
பிற்புனைவுக் கூட்டணி - coalition after elections.
பேதம் - வேறுபாடு. பெயர்+து +அம் = பேதம்.(திரிபு).
நொய் - குறுநொய்.
வற்பு - வலிமையினால்
நேர - போல
அற்புத்தளை: அன்பென்னும் கட்டு.
(சீவக. 28850) காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக