தேர்தலிலே வெற்றிஎந்தப் பக்கம் என்று
வேர்த்திடவே கூடியங்கு வீற்றி ருந்து
சார்தலின்றிச் சாய்வின்றித் தொலைநற் காட்சி
சாற்றுகிற முடிவுகண்டு சடைதல் இன்றி
ஓர்தலுடன் கருத்துரைகள் ஊறக் கேட்டார்
ஓய்வினையும் மறந்தவராய் ஆயும் மக்கள்;
தீர்தலுண்டே உளக்கிளர்ச்சி !குடிநல் லாட்சி
தேர்ந்திடவே நேர்ந்திடுமே ! தேசத் தோர்க்கே.
பொருள்:
சார்தல் - கட்சிச்சார்பு.
சாய்தல் - ஒருதலைச் சாய்வு
சடைதல் - சோர்வு
குடியாட்சியில் தேர்தல் முதன்மை வாய்ந்தது.
அறிவிப்புகள் வெளியாகும்போது என்னே குதூகலிப்பு.
இத்தகைய மன இணைப்புகள்தாம் குடியாட்சியைச்
செழிக்கச்செய்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக