வியாழன், 17 மே, 2018

கர்நாடகத் தேர்தல் : கட்சி என்பதன் பொருள்.

நல்ல கூத்தாக இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில்
இப்போதுதான் மக்கள் தேர்ந்தெடுத்தோருள்
இருவர் காணாமற் போய்விட்டார்களாம்.
கட்சி மாறிவிட்டார்கள் என்பது
ஊடகங்கள் எழுப்பும் ஐயப்பாடு.

எது எப்படி ஆனாலும்
எடியூரப்பா  (ப ஜ க )  முதல்வராகப் பதவி உறுதிமொழி
எடுத்துக்கொண்டுவிட்டார்.
அதைத் தடுக்க எதிர்க்கட்சி மேற்கொண்ட
உச்சநீதி மன்ற வழக்கு
தள்ளுபடியாகிவிட்டதாம்!

இனி நடப்பன கவனித்துக்கொண்டிருங்கள்.


இப்போது கட்சி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

கள் என்பது அடிச்சொல்.

கள்+து:     கட்டு,  கட்டுதல்.  வினைச்சொல் ஆக்கம்.
கட்டுவது என்றால் தனித்தனியானவற்றைச் சேர்த்து இணைத்தல்.

புல்லைக் கட்டுதல்.  புல்லுக் கட்டு.
மாடு கட்டுதல்.
கலியாணம் கட்டுதல்.
இப்படிக் கட்டுதல் பல.

கள்+தி = கட்டி.    கட்டு+ இ = கட்டி எனினுமாம்.
இருவழியிலும் சொல் அமையும்.

சீனிக் கட்டி.  சக்கரைக் கட்டி முதலிய கட்டிப் பொருள்கள்.
கட்டி புறப்பாடு.

கள்+து+ஐ =  கட்டை.   கட்டு+ஐ = கட்டை எனினுமாம்.
குட்டை > கட்டை என்றும் அமையும்.
குள் ( நீட்டமில்லாதது) என்றும் பொருள். கட்டப்பட்டது
என்றும் பொருள்.

கள் என்ற அடிக்குப் பல பொருள் உண்டு.  கருப்பு என்பதும்
ஒன்று.  கள் குடிவகை இன்னொன்று.

கள் > கழ   ஒ.நோ:  அள் > அழ.   கொள் > கொழு.  (முன் இடுகை)

கழ > கழலை:  கட்டி.  புறப்பாடு.

கழ> கழகம்.

கள > களம்:  பலர் ஒன்றாக நிற்குமிடம்.  அல்லது பலரும்
பொருள்களும் சேர்ந்திருக்குமிடம்.   எ-டு: போர்க்களம்.

கள்+சி :  கட்சி.
பலர் இணைந்திருக்கும் நிலைமை.
சி:   தொழிற்பெயர் விகுதி.   அழல்> அழற்சி;  மலர் > மலர்ச்சி எனக்
கண்டுகொள்க.

கட்சிகள் இரண்டு மூன்று தொகுதிகளானால்  >
மூன்று கட்சிகள் என்பர்.
 
கள் என்னும் அடி பல சொற்களைப் பல பொருள்பட
விளைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: